| ஏமாற்றுக்காரர் |
| |
| மன்னிப்பவன் மனிதரில் மாணிக்கம் என்று உனை மன்னிக்க எண்ணும்போது உன்னை மன்னித்தேன் என்று சொன்னாய் பார் அப்போதுதான் தோன்றிற்று உன்னையெல்லாம் எப்படி மன்னிப்பதென்று! |
| |
| *** |
Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts
Friday, April 2, 2010
ஏமாற்றுக்காரர்
நிலம்
| நிலம் |
| இயற்கையின் குழப்பம் நிலத்தை முழுவதும் நீர் சூழாமல் விலக்கி வைப்பது நெருப்புச் சூரியனா? நிலவா?, கடலா? காற்றா? பனிக் கட்டியா? எல்லாமும் இணை சேர்ந்து நடத்தும் ஆக்கிரமிப்பு ஆட்டமா? |
| *** |
நெருப்பு
| நெருப்பு |
| |
| நேரில் மோதினால் நீரிலே அழியும் நெருப்பு சினந்து, தகித்து, தணலாய், வெட்கையாய், வெயிலாய்ச் சூடு படுத்தி நிழல் யுத்தத்தால் மட்டுமே கொதிக்கவும், ஆவியாக்கவும், அழிக்கவும் முடிகிறது நீரை. |
| |
| *** |
Monday, June 22, 2009
குருவிக் கூடு

| குருவிக் கூடு |
| |
| குருவி ஒன்று வீடு கட்டிக் கொண்டிருந்தது கூடத்துச மேல் சாளரத்தில்... தேடிப் பிடித்து ஒரு மூங்கில் கழியாலதைக் கலைத்துவிட இளசு ஒன்று எத்தனிக்க வீட்டுப் பெரிசு சொன்னார் குருவிக் கூட்டைக் கலைக்காதே உனக்கு வாரிசு இல்லாமல் போய்விடும்... விட்டுவிட்டது இளசு... வாரிசுப் பயமா? மனித நேயமா? இளசா? பெருசா? எதுவோ ஒன்று... இல்லை எல்லாம்... அங்கே இன்று குருவிக்கூடு அங்கீகரிக்கப் பட்டு விட்டது... எதையும் அறியாக் குருவி மட்டும் இன்னும் சிரத்தையாய் கூடு கட்டிக் கொண்டிருக்கிறது நெஞ்சுக்குள்ளே ஒரு புதுச் சொந்தம் சுவாசித்த காற்றில் சுதந்திரம் இன்றைய இளங்காலை ஓர் இனிமை மிக்க ஆரம்பம்... |
| |
| *** |
Friday, June 19, 2009
ஐவருக்கும் காதலன்
| ஐவருக்கும் காதலன் |
| |
| நிலம்: பச்சைப் பட்டுடுத்திப் பாதிக் கண்மூடி நாணித் தலை குனிந்தாய் நங்கையே எந்த நிலம் நோக்கி? நீர்: வெள்ளை உள்ளத்தை வெள்ளமே நீ காட்டுகின்றாய் உன்னையே பார்த்தாலும் என்னையே நீ காட்டுகின்றாய் தண்மை அன்பை தரணிக்கே நீ ஊட்டுகின்றாய்! தண்ணீரே அறிவாயா நீரின்றி நானில்லை... நெருப்பு: உலகுக்கு நீ வேண்டும் உணவுக்கு நீ வேண்டும் உயிராக நீ வேண்டும் உளத்தே நீ வேண்டும் மழையாக்க நீ வேண்டும் ஒளியாக்க நீ வேண்டும் குளிரோட்ட நீ வேண்டும் எரியூட்ட நீ வேண்டும் மயக்கத்தைத் தோலுரிக்க இணக்கமாய் நீ வேண்டும் தயக்கத்தை வேறருக்க இயக்கமாய் நீ வேண்டும்! நெஞ்சத்தில் நீ இருந்தால் அஞ்சாதோ எதிரணியும் மஞ்சத்தில் வந்தமர்ந்தால் பற்றாதோ மனமிரண்டும் ஆன்ம ஜோதியாய் அகத்தே இருளகற்றி பொருப்பாக இருப்பாயா? நெருப்பான என்கண்ணே? காற்று: தேகத்தே உயிர்தரிக்க தேவை திடப்பொருள்(?) நீ... தென்றல் என்றாலும் தேகமே உன்பொருள் காண்! ஆனவை ஏதிருந்தும் அத்தனையும் வீணே காண் சுவாசமிலாதே நான் சுகிப்பது ஏதும் உண்டோ? ஒலியென நீ அல்லால் உரைத்திட மொழி ஏது? அலையென நீ அல்லால் அழைத்திட வழி ஏது? ஆகாயம்: நெஞ்சில் சிறகடித்து உன் நினைவாய் இருக்கையிலே பஞ்சாய் பறக்குதடி மனம் பரிவட்டம் கொள்ளுதடி... அண்ட வெளியிடையே மனம் ஆனந்தக் களிப்பிடையே வண்டாய் பறக்கையிலே வானம் வசப்பட்டு இனிக்குதடி... துள்ளிக் குதிக்குதடி தோழி தொடரும் பெருவெளியில் எல்லை காணாதே மனம் ஏகிக் களிக்குதடி... |
| |
| *** |
Subscribe to:
Posts (Atom)