| தமிழர் உலகம்! |
| கிளைகளில் கூடு கட்டினால் வேரிலே தீ; கிளையில் இலை துளிர்த்தால் வேரிலே வென்னீர் கிளைகளிலும் பல வேளைகளில் இலைகள் உதிரும் வெட்கத்தைத் தொலைத்த வேர்களில் சாதனை மவுனம் மகரந்தச் சேர்கைக்காக அலைகிறது மன்மத அம்புகள் நகல்களின் புதுப்பிப்பில் நக்கலாய் நோபல் கனவுகள் உறக்க உல்லாசத்தில் விழிக்க மறுக்கும் மாக்கள் எச்சில் சுகத்தில் குரைக்கும் சில்லறை ஜால்ராக்கள் சுரண்டலின் மிச்சத்தில் எலும்பாய் சோம்பல் சாலைகள் சுய முன்னேற்றங்கள் இடைத் தரகர் பேரத்தில் இலவச முதலீட்டில் கொழித்துச் செழிக்கிறது கொள்ளை மறக்காமல் தமிழுக்கும் அவ்வப்போது இலஞ்ச அர்ச்சனை இணையமா? உலகமா? இசையா. இணையா இதயங்கள் போட்டியால் அல்ல பொறாமையால் புகையும் எரிச்சல்கள் திருட்டையும் ரசிக்கும் மாந்தரின் இளித்தவாய் வேடிக்கை நண்டுக் குணத்தால் என்றுமே நொண்டும் குதிரை சண்டிமாடாய் தனித்தீவாய் முன்னேற மறுக்கும் சமூகம் அறிவிலிகள் தேசத்தில் என்றும் அறிவாளிகள் சிறுபான்மை வீரியம் கொண்ட வித்துகள் மாத்திரம் காற்றில் நம்பிக்கை ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”! வசந்தம் என்பதும் சுழற்சியில் நிச்சயிக்கப்பட்ட விதியே! |
| *** |
Showing posts with label புதுக்கவிதை. Show all posts
Showing posts with label புதுக்கவிதை. Show all posts
Monday, December 20, 2010
தமிழர் உலகம்!
Wednesday, October 27, 2010
கண்மணி அன்போடு...
| கண்மணி அன்போடு... |
| என் சிந்தனைக்குள் நீயும் இருப்பாய் நம்பிக்கையோடு! என் சிந்தனை முழுவதும் இருக்க வேண்டுமென எண்ணாதே.... அன்பே உலகில் உன்னைத்தவிர என்னையும் உன்னைப் போலவே பலர் நேசிக்கவும் நேசிக்கப் படவும் விரும்புகிறார்கள் பல மனிதர்களின் புரிதலுக்கு நான் வேண்டுமாம் சாதனைகள் செய்ய மனம் தேவை பயணம் செய்ய கவனம் தேவை கோளத்தின் அட்சய தீர்க்க ரேகைகளின் இடைவிட்ட சந்திப்புக் கணங்களில் மாத்திரம் நீயும் நானும் ஊடாடலாம்... நீ நீயாகவும் நான் நானாகவும் நாம் நாமாகவும் இவ் உலகில் பல சமயங்களில் செயல்பட ஏன் வாழவும் வேண்டியவர்கள் எப்போதும் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டும் ஆற்றும் பணியைப் பார்த்துப் பார்த்து பங்கெடுக்க அடம்பிடித்து அடிப்படை தெரியாமல் பலமுறை விழிப்பாய் ஏன் சொல்லிக் கொடுக்க மாட்டீர் என்று வம்பிழுத்து நான் கற்றுக் கொண்டால் வெற்றி பெற்றுவிடுவேன் என்றுதான் சொல்லித்தர மாட்டீர்கள் என்று கோபப்பட்டு... அழுது... சே சே... சரியான இம்சை நீ! என் சிந்தனையைச் சிதற வைத்து என்ன சுகம் காணுகின்றாய் என் இனியவளே? வளர்ந்தாலும் நீ இன்னும் சிறுபிள்ளை தான்... என்றால் நீங்களும் தான் என்பாய்!!! ஐயோ நான் என்ன செய்ய? |
|
|
| *** |
Monday, October 4, 2010
எதுவும் எதுவுமாகலாம்...
| எதுவும் எதுவுமாகலாம்... |
| தெய்வங்கள் மனிதராகலாம்: அவதாரங்கள் மனிதரும் தெய்வமாகலாம்: புத்தன் ஏசு காந்தி நடிகனும் தெய்வமாகலாம்: எம்.கே.டி. எம்.ஜி.ஆர் என்.டி.ஆர். என்ன செய்வது சில நேரங்களில் சில அவதாரங்கள்... நடிகரும் ஆகலாம்: டி.ஆர். சாம் ஆண்டர்சன். :) |
| *** |
Friday, October 1, 2010
கைபேசி! (பகுதி: 1)
| கைபேசி! (பகுதி: 1) |
| புதுக்கவிதை: |
| அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அவள் அப்பனும் நோக்கினான் அட அனைவருந்தான் நோக்கினர் ”பெரிதாய்” ஒன்றுமில்லை... நோக்கியாக் கடை ஷோக்கேசில் புத்தம் புதுவரவு புதியவகைப் புதுவடிவு கையடக்கக் கவர்ச்சி நோக்கியாக் கைபேசி!!!
|
|
|
| எண் சீர் விருத்தம்: |
| நோக்கரிய நோக்காய் நுணுக்கரிய நுண்ணுர்வாய் நோக்கியரே நோக்கினரே நோக்கா நோக்கியாம் நோக்கியா அங்காடிக் நோக்கப் பேழையிலே நோக்கக் கவர்ச்சியாம் நோகாத வளர்ச்சியாம் போக்கும் வரவும் போற்றிடுந் தெளிவாம் நேர்த்தியாம் தோற்றமாம் நெடுங்காலத் தேற்றமாம் நோக்கும் வாக்கும் நுவலும்புலச் சித்திரமாம் நோக்கியாப் புதுவரவாம்; நுண்பதுமைக் கைப்பேசி!!!
|
|
|
| இன்னிசை வெண்பா: |
| நோக்கியாப் புதுவரத் துக்கருவி நோக்கின் வாக்கில் வல்லொலி திரையில் தெள்ளொளி தாக்கும் மென்கிருமிக் காப்பு; தகதகத்து நோக்கக் கவர்ச்சிக் கைப்பேசி யுமஃதே!
|
|
|
| அகவல்: |
| கையகப் படுத்திய வையகச் சுருக்கம்; காதினுள் அடங்கும் காதலின் நெருக்கம்; வானொலி பொழியும் தேனொலி இன்பம்; வண்ணொளி மொழியும் கண்ணொளி பிம்பம்; வரம்புகள் இல்லா வானலைப் பிணையம்; நரம்புகள் இல்லா நனவலை இணையம்; தகுதியைக் கூட்டும் கௌரவத் துண்டு; தரத்தினைக் காட்டும் யௌவனப் பெண்டு; பணியோ இலையோ பதவிசுப் பேழை; பணிவோ நிலையோ உணரா ஏழை; பொய்யோ மெய்யோ புலம்பிடும் கருவி; புரிந்தால் இசையாய் உருகிடும் அருவி; அவசர கால அடிப்படை மருந்து; அடிக்கடி படைக்கும் அழையா விருந்து; உறவுகள் பெருக்கும் உணர்விலாச் செல்லம்; உயிரினைச் சொடுக்கும் உரைதனில் வெல்லம்; அரற்றும் மொழிக்கே கட்டண எச்சம்; அனைத்து வரத்தும் இலவச மிச்சம்; அறிந்தவர் தெரிந்தவர் கூப்பிடு தூரம்; அழைப்பும் மறுப்பும் கூடுதல் பேரம்; தொலைவைச் சுருக்கிய ஓயாத் தொல்லை; செலவைப் பெருக்கிடும் மாளாக் கிள்ளை; தனிமை கெடுக்கும் தடங்கல் வில்லை; தவறியும் பிழைக்கும் வளர்ப்புப் பிள்ளை; உரையினைப் பரிமாறும் இடைமுகத் தகடு; உளங்களை இடம்மாற்றும் மறைமுகச் சுவடு; தடைகளைத் தாண்டிடும் படையெறி அம்பு; கடமைகள் வேண்டிடும் கைப்பொறி வம்பு; இருப்பினை இழக்கா இயந்திர உலவி; இரக்கைகள் இல்லா இராட்சதக் குருவி; கணத்திடை கடத்தும் காற்றலைப் பூவை; கடமையைத் துலக்கும் எந்திரப் பாவை; குறுகியத் தகவலின் விரைவியத் தூது; கொஞ்சிடும் சேவையில் விஞ்சுவது யாது? நன்மைகள் சேர்க்கும் நாவலந் தீவு; நம்பிக்கை காக்கும் நயம்படு மாது; தரவினைப் பேணும் குறுந்திரள் உருட்டி; வர-வினை செல-வினை வைகுந் திரட்டி; நினைவினைத் தூண்டும் குறிப்புரை ஊட்டி; நனவினைப் பகரும் ஆண்டுநாட் காட்டி; சலிப்பினைத் தெரியாச் சமர்த்துக் குட்டி; சஞ்சலம் அறியாச் சந்தனக் கட்டி; தற்புகழ் தேடா ஊழியப் பிறவி; தன்லயந் தவறா தனிபெருந் துறவி;; நினைவகச் சுமையைக் குறைக்கும் நட்பு; நெருங்கிய அண்மையில் துடிக்கும் உயிர்ப்பு; வையகம் இங்கே வாழ்கிற வரைக்கும் மெய்யுறை அங்கமே இக்கை யலைபேசி! இதயத்து நெருக்கம் மார்பக வலியாம்; காதொடு பெருக்கம்; கபாலப் புற்றாம்; காந்தக் களத்திடைக் கனன்றிடும் வாழ்வே; கவனம் வைத்திடில் வருமோ தாழ்வே? அறிவொடு நுகர்வின் அனைத்தும் நலமே; அளவினை மிஞ்சின் அமிர்தமும் விடமே!!!
|
|
|
| *** |
Labels:
அலைபேசி,
புதுக்கவிதை,
பொது,
மரபு
Friday, September 24, 2010
உயர்வுள்ளல்...
| உயர்வுள்ளல்... |
| |
| கவிதைப் பின்புலம்: |
| |
| மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை, இந்த முறை கடல் நீரை பெட்ரோலாக்கி காட்டப் போவதாக சவால் விட்டுள்ளார். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று சென்னையில் 1 லட்சம் லிட்டர் கடல் நீரை எரிபொருளாக்கிக் காட்டப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். உண்மையில் கடல் நீரால் பெட்ரோல் செய்து காட்டி விட்டால் மாபெரும் மேதை என ஒத்துக் கொண்டு நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் தானே. என்ன சொல்கிறீர்கள்?. நன்றிகள்: http://narumugai.com/?p=13088 |
| |
| *** |
| |
| கடல் நீரில் குடி நீர் கண்டு விட்டது உலகம்;.. கடல் நீரில் எரி பொருளா? கதையா? நிஜமா? இராமர் பிள்ளை நம்பிக்கை இராமரா? கொறிக்கும் அணிலா? பொறுத்திருந்து பார்ப்போம்? வெற்றி பெற்றுவிட்டால்... தமிழகத்தில் ஒவ்வொரு நகர ஊருக்கும் தினம் தினம் விமானச் சேவை ஓட்டலாம் தான்.... வண்டி மாடுகளுக்கு கண்டிப்பாய் விடுதலை... இழுப்பு உழவென பெட்ரோலிலே விவசாயம்... சென்னைத் துறைமுகமே எண்ணைத் துறைமுகமாய்... அமெரிக்கர்களுக்கு தமிழகத்தில் அளிப்போம் வேலைவாய்ப்பு... இந்தியன் விசாவிலை அயல்நாடுகளில் அதிகரிப்பு! கருநாடகா காவேரி கூவத்திலே கூட்டணி!!! அடடா அடடா கற்பனைக்கேது எல்லை? உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல் வேறல்ல! நடப்பவை எல்லாம் நல்லதாக நடக்கட்டும்!! நல்லதே நடக்கட்டும்! ஆல் தி பெஸ்ட் இராமர் பிள்ளை! |
| |
| *** |
சரியான மூக்குடைப்பு?
| சரியான மூக்குடைப்பு? |
| |
| கவிதைப் பின்புலம்: |
| |
| இன்றையச் செய்தி: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைப்பு மகாபலிபுரம்: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து எம்எல்ஏ தலைமையில் பாமககவினர் போராட்டம் நடத்தினர். திருக்கழுக்குன்றத்தில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது. மகாபலிபுரம் பைபாஸ் ரோட்டில் மாமல்லன் சிலை உள்ளது. இந்த சிலையை யாரோ உடைத்துள்ளனர். மேலும் வன்னியர் சங்க கல்வெட்டு மற்றும் பாமக கொடிக் கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் பாமகவினர் மகாபலிபுரத்தில் குவிந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் மறியலிலும் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். இந்தப் போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். சிலை உடைப்பைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் 2 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. http://thatstamil.oneindia.in/news/2010/09/22/mamallan-statue-damaged-mahabalipuram.html |
| |
| *** |
| |
| சிலை உடைப்பைக் கண்டித்து பேருந்து உடைப்பா? பேருந்து உடைப்பைக் கண்டித்து எதை உடைக்கலாம்? உடைப்போர் மண்டைகளையா? கைகளையா? முதுகெலும்பையா? உடைக்க வேண்டிய வருணமும், ஜாதியும், மதமும் உடைபட்ட சிலைகளின் இடை வெளிகளிலும் கூட எகத்தாளமாய்த்தான் இன்னமும் கை கொட்டிச் சிரிக்கிறது!!! உணர்வற்ற உள்ளங்களினால் உடைபட்டுக் கிடக்கிறது உலகம்.... மமதையுற்ற நெஞ்சுக்களில் மங்கிக் கிடக்கிறது ஒளி... உண்மையான விடிவு எற்றைக்கு எம் மனிதர்காள்? |
| |
| *** |
Labels:
சமூகம்,
புதுக்கவிதை,
மரபு,
மானுடம்
Friday, April 2, 2010
நிலம்
| நிலம் |
| இயற்கையின் குழப்பம் நிலத்தை முழுவதும் நீர் சூழாமல் விலக்கி வைப்பது நெருப்புச் சூரியனா? நிலவா?, கடலா? காற்றா? பனிக் கட்டியா? எல்லாமும் இணை சேர்ந்து நடத்தும் ஆக்கிரமிப்பு ஆட்டமா? |
| *** |
நெருப்பு
| நெருப்பு |
| |
| நேரில் மோதினால் நீரிலே அழியும் நெருப்பு சினந்து, தகித்து, தணலாய், வெட்கையாய், வெயிலாய்ச் சூடு படுத்தி நிழல் யுத்தத்தால் மட்டுமே கொதிக்கவும், ஆவியாக்கவும், அழிக்கவும் முடிகிறது நீரை. |
| |
| *** |
Tuesday, March 30, 2010
காதலா? காமமா?
| காதலா? காமமா? |
| |
| அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி மலர்ந்தது காதலா? காமமா? காமமே... ஆம்... அன்றில் காதலில் எப்படி அக்னிப் பரீட்சை? பிறருக்குக் காட்டுவதா காதல்? சந்தேகப் பட்டவள் தீயில் உயிர்த்தெழுந்தாள் சந்தேகப் பட்டவன் மூழ்கிய நீரில் செத்தே போனான். நம்பாத காதல் இராமயணம்... விதியின் முன்னால் காதலுமில்லை காமமுமில்லை இராமனுமில்லை இராவணனுமில்லை... |
| |
| *** |
Monday, March 29, 2010
ஈ.வே.கி.ச. இளங்கோவன்!
ஈ.வே.கி.ச. இளங்கோவன்! |
| ஓரங்கட்டப்பட்ட ஓநாய் ஒன்று கிட்டிய சந்தர்பத்தில் தன்னிருப்பைக் காட்ட ஓலமிடுகிறது பாவம் தன் தாய் மொழியிலல்ல தமிழில்!!! தத்துப் பித்து தத்துவம் சொல்ல விட்டுப் போன எச்சமாய் சத்தமிட்டுப் பார்க்கிறது... ஏமாளித் தமிழனிடம் இன்னொரு சந்தர்ப்பம் கிட்டாதா? கிட்டவே கிட்டாதா? சரி சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் மொழி என்பது என்ன வெறுஞ் சத்தந்தானே? எந்த வாயில் வந்தாலென்ன? |
| |
| *** |
Labels:
அரசியல்,
இளங்கோவன்,
நடப்பு,
புதுக்கவிதை
நித்தியானந்தா...
| நித்தியானந்தா... |
| |
| இனி ஒரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம் தனி ஒரு மனிதனுக்குக் காயடித்த பின்னரே - இனிக் காவி அணிவிப்போம்... தனியொரு மனிதனின் லீலையைப் படம் பிடித்து வினியோகிப்பவனைத் தரணியில் துரோகி என்போம்... காமத்தை உணராத் துறவி முற்றும் அறிந்தவனும் இல்லை முற்றும் துறக்காத துறவி பரமஹம்சன் என்பதும் இல்லை காமம் செய்யும் குரு என்பவன் கெட்டவனுமில்லை... தொலைக் காட்சியில் ஒளிபரப்புவோன் புனிதனுமில்லை... ஊரான் சொத்து 90 ஏக்கரை தன் குடும்பம் என்ற கலைக் குடும்பத்திற்குக் கொள்ளை அடித்ததை கவனச் சிதறல் செய்ய அஜீத் டயலாக் எபிசோட்... மாணவர்கள் கொலை, ஸ்டாலின் புத்தக சுயபாராட்டு கவனச் சிதறலுக்கு பேரம் படியாத நித்தியானந்தா - ரஞ்சிதா பழைய வீடியோ ஒளிபரப்பு... வாழ்க தமிழகம்! நித்தியானந்தா தற்கொலை வேண்டாம்.. துறவைத் துறந்து ரஞ்சித்தாவை அவர் விவகாரத்துப் பெற்றபிறகு முறைப்படி மணந்து இன்புறுவாயாக... பிறக்கும் குழந்தைக்கு பரமானந்தன் எனப் பெயர் சூடுக... யார் யாரோ வாழ்கிறார்கள் அட நீங்களும்தான் வாழ்ந்துவிட்டுப் போங்களேன்... நடந்த அவமானமே உங்களுக்குப் போதிய தண்டனை! |
| |
| *** |
Labels:
நடப்பு,
நித்தியானந்தா,
புதுக்கவிதை
பெண்ணீயம்
| பெண்ணீயம் |
| அப்பாதான் முதலில் பார்த்தார் முகப்புக் கூரைத் தீப் பற்றியதை தோட்ட நடைவாசலை ஓட்டமாய்க் கடந்து தெருக்கதவைத் திறந்து தெருவில் போவோரைப் பார்த்து “ஐயா தீப்புடிசிருச்சு ஓடியாங்க” என்று கத்திவிட்டு கிணற்றடியில் கிடந்த வாளித் தண்ணீரை தூக்கிக் கொண்டு ஓட எத்தனிக்க உள்ளிருந்து ஓடிவந்த சூடிதார் மகள் இடுப்பில் கைவைத்தபடி அப்பனைப் பார்த்துச் சொன்னாள்: “இதுதான் ஆணாதிக்கத்தின் உச்சம்!!! பெண்கள் வந்தால் தீயை அணைக்க மாட்டார்களா? ஐயாக்களை மட்டும் கூப்பிடுகிறீர்களே?” வேடிக்கைக்கு நேரம் இதுவல்ல மகளே என்ற அப்பா விரைந்து சென்று வாளி நீரை கூரையில் எறிந்தார்... வீட்டினுள் இருந்து ஓடி வந்த அம்மா மகளின் மேல் “மூதேவி மூதேவி” என்று இரண்டு முறை மொத்தினார். உன்னையெல்லாம் காலேஜுக்கு அனுப்பிச்சோமே... சனியனே தண்ணீரைக் கொண்டுபோய் ஊத்துடி, இல்லைன்னா வீட்டுச் சாமானையாவது வெளியில இழுத்து போடுடி பீடை என்று கதறியதோடு அவரும் கிணற்றில் வாளியை உள்ளிறக்கி நீரை இறைக்கலானார். கிணத்தடி நீர்த் தொட்டியில் அடித் தண்ணீரை செம்பில் மோந்து இன்னொரு வாளியை நிரப்பிக் கொண்டிருந்த அப்பத்தா வாய்ப் புகையிலை எச்சிலைப் புளிச்சென்று தூப்பாளில் துப்பி மனைப் பெண்டிரைப் பார்த்துச் சொன்னார்... பெண்ணீயம், பித்தளை புண்ணாக்கு “வெளங்கீருவியடி பொண்டுகளா...”! |
| |
| *** |
Wednesday, June 24, 2009
சுழற்சி
| சுழற்சி |
| |
| தன்னை விடச் சிறிய மீனை விழுங்கிக் கொண்டிருக்கும் மீன் இன்னும் உணரவே இல்லை தான் நீந்திக் கொண்டிருப்பது இன்னொரு மீனின் வாயில் என்பதை... என் கண்ணின் மணியில் நீ உன் கண்ணின் மணியில் நான் மீண்டும் உள்ளே உள்ளே மீண்டும் ... புகைப்படக் கருவியை வைத்துக் கொண்டு ரகசியமாய் நான் அவனைப் படம் பிடிக்க எனக்குப் பின்னால் இன்னொருவன் என்னை அவனுக்குப் பின்னால் இன்னொருவன் அவனை... அட நான் படம் பிடிப்பவனும் யாரையோ படம்பிடிக்க.. அடச்சே கடைசியில்தான் தெரிந்தது அந்த அவன் தான் அவன்... யாரையோ, எதையோ தேடி ஓடுகையில் ஒருவன் அல்லது எதுவோ துரத்துவதும் இது தானோ... பூமி சூரியனைச் சுற்றி சுழன்று கொண்டே இருக்கிறது தன் நீள் வட்டப் பாதையில் சந்திரன் பூமியை... எதைத் தேடி? |
| |
| *** |
சந்தேகம்
| சந்தேகம் |
| தக்ஷிணா மூர்த்தி நஞ்சுண்ட கண்டன் தென்னாடுடைய சிவனாய் என்னாளும் இருக்கிறார்... அமிர்தம் உண்ட தேவர்களெல்லாம் எங்கே? மண்ணுலகை விடுத்து விண்ணுலகில் தான் சாவாமல் வாழ்கிறார்களோ? கொல்வதும் நானே கொல்லப்படுவதும் நானே என்னை நம்பி ”அம்பைத் தொடு, அடி” என்று சொன்ன கண்ணனும் ஒருநாள் செத்தே போனான்; கதை கேட்ட பக்கத்து வீட்டு அலமு கேட்டாள் மாமா ஒரு சந்தேகம் செத்துப்போன கண்ணனுக்கு சொர்க்கமா, நரகமா? |
| |
| *** |
அப்பா
| அப்பா |
| |
| அப்பா... அண்ணனுக்கும் நீதான் அப்பாவாம் ஆனால் அவன் ஒரிஜினலாம் நான் மட்டும் டூப்ளிகேட்டாம் ஏன் அப்பா அம்மாவை நீ கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை? அம்மாவுக்கு வேணும்னா ஓகே எனக்கு எல்லா இடத்துலயும் அவமானமா இருந்தாலும் கூட உங்க மகள்னு சொல்லிக்க மட்டும் நான் வெட்கப்பட்டதே இல்லை அப்பா... நீங்கள் ஸ்விஸ்ல பணம் போட்டாலும் எனக்கு MP சீட் வாங்கித் தந்தாலும் "அம்மாவின்” மகள்ங்கிறது மட்டும் போகவே போகாது ... அதுக்காகத்தான் நான் என் புள்ளைய அப்பனே தெரியாம வளர்க்கப் போறேம் பா! |
| |
| *** |
Subscribe to:
Posts (Atom)

