அன்னையர் அந்தாதி
(பகுதி: 5)
|
|---|
3.
அம்பிகை அந்தாதி
- விரிவாக்கம்
|
இறை வணக்கம்:
ஆதிஅந்தமில் அத்தனொடு அங்கமாகி அண்டமெலாம் சோதிப்பரமாய் சேர்ந்திலங்கும் அம்மை - ஆதிபராசக்தியே நல்லவை யாவுமாகி நலத்தொடு யாதும்வெல்லும் வல்லமை ஈவாய் வலிந்து. |
| அந்தாதிக் கட்டளை:
(விரிவாக்கம்) வான்நிறை சேயோனாய் வாகையாகும் பேரொளியே! |
அந்தாதி:
33. நவலோகம் நவரசத்து ஞாலமாகும் தாயவள்!
வான்நிறை மீன்போலும் வையமீதில்
வழுகழுவும் பிறவிகளாய் ஊன்நிறை யாக்கையுள் உயிர்தரித்து உதித்துவளர் யாத்திரையில் கோன்நிறை அண்டமொடு குவலயக் கோட்டமும் செம்மையுற தேன்நிறை நவசக்தித் தோன்றலாகும் சச்சிதானந்தச் சேயோனே!
34. நவயிரவுப் பரவசத்து ஞானமாகும் மாயவள்!
சேயோனாய் அவதரித்து சேவையிலும் தொண்டிலும் சின்னகை வாயோனாய் உடற்பொருள் ஆவிமனம் வாக்குயாதும் யார்பாலும் காயோனாய் அன்பாதரவு கருணையை அர்ப்பணித்துக் கடமையில் தாயோனாய் ஆற்றுவதே தாயர்போற்றும் வெற்றி வாகையாகுமே!
35. முந்தையுமாய் மூலமுமாய் சித்தியாகும் சிரமவள்!
வாகையாகும் பிறவிக்கும் வண்ணம் நிறைகும் வாழ்க்கைக்கும் தோகையாகும் தோழமைக்கும் துணைநின்ற சுற்றம் சூழலிற்கும் ஈகையாகும் நெஞ்சிற்கும் எண்ணம்விதி ஆயுள்ஞானம் யாதிற்கும் போகையாகும் முன்னரே பொழிகிறோம் ஆழ்ந்தநன்றி, பேரொளியே!
36. மும்மகளாய் முதல்வியாய் முக்தியாகும் பரமவள்!
பேரொளியே! பராபரையே! பேதமிலாப் பெருவெளியே! பேரண்டத்து வேரொளியே! அடிமுடியாய் முடிஅடியாய் முதலாகும் மும்மையர் நேரொளியே! முக்கண்ணியே! நிலைபேற்று நாரணியே! நேர்மறைத் தேரொளியே! திரிபுரைநின் சேவடிக்கே சரணாங்கள் வான்நிறையே! |
* அம்பிகை அந்தாதி முற்றும் *
|
| அம்பிகை அகவல்: (தலைப்புக் கவிதை) |
| அணுவாகி அண்டமாகி அகிலமாளும் அன்னையள்! அந்தமாதி அலகிலாது ஆடிநிற்கும் அம்மையள்! ஆலமுண்ட கண்டனின் அகத்துறை மாதவள்! ஆற்றலாகி நம்பகத்தின் ஊற்றுமாகும் தேவியள்! இயங்குநிலை மெய்ப்பொருளின் இகபரத்துச் சக்தியள்! இயற்கையாகி உய்வைத்தரும் இன்பநிலை முக்தியள்! ஈஸ்வரியாய் பரம்பொருளாய் இலங்குமுயர் தாயவள்! ஈன்றவற்றில் கருப்பொருளாய் துலங்குமெழில் தூயவள்! உயிருடலாய் உளமதியாய் உலவிநிற்கும் உமையவள்! உணர்வகமாய் பலநலமாய் உறுதிநிற்கும் இமையவள்! ஊழியாட்டம் நர்த்தனமாய் உலகையாட்டும் வல்லியள்! ஊக்கமொடு ஊட்டமுமாய் உவகையூட்டும் மெல்லியள்! எந்தையுமாய் அன்னையுமாய் எழுந்தருளும் இறையவள்! எண்ணமுமாய் திண்ணமுமாய் இதயமாகும் நிறையவள்! ஏற்றமுமாய் மாற்றமுமாய் இயக்கமாகும் மென்மையள்! ஏதிலார்க்கும் வாழ்வியலாய் இன்பமாகும் தன்மையள்! ஐக்கியமாய் பாலிணையாய் அறங்காட்டும் பரமவள்! ஐங்கரனின் தாயமுதாய்த் திறங்கூட்டும் உரமவள்! ஒப்பிலியாய் அன்பழகாய் உயர்வுகாட்டுந் தலைமகள்! ஒற்றுமைதன் திடவளமாய் வெற்றிதீட்டும் மலைமகள்! ஓங்காரம் உடுக்கையிடி ஒலியிலங்கும் மாயவள்! ஓம்புமுயிர் மேம்படவே ஒளிதுலங்கும் தூயவள்! ஔடதமாய் விடத்தையும் அமுதமாக்கும் அன்னையள்! ஔவியத்து முடத்தையும் அழித்தருளும் சென்னியள்! கருப்பொருளில் உயிர்மெய்யாய் கலந்திலங்கும் தாயவள்! கருணையுளோர் அன்னையராய்க் கனிந்திலங்கும் தூயவள்! சங்கரியாய் கொற்றவையாய் சங்கரிக்கும் நெருப்பவள்! சங்கரனார் அங்கவையாய் சஞ்சரிக்கும் பொருப்பவள்! தருமத்தின் துணைக்கோடாய்த் தரணியாளும் துர்க்கையள்! தருணத்தில் இணைவாழ்வாய்த் திறமருளும் இயற்கையள்! பசுபதியாய்ப் பாசமாகிப் பரமுமாகும் அன்னையள்! பசுங்கிளியாய் நேசமாகும் பராசக்திஓம் அம்மையள்! நவலோகம் நவரசத்து ஞாலமாகும் தாயவள்! நவயிரவுப் பரவசத்து ஞானமாகும் மாயவள்! முந்தையுமாய் மூலமுமாய் சித்தியாகும் சிரமவள்! மும்மகளாய் முதல்வியாய் முக்தியாகும் பரமவள்! அம்பிகை போற்றி போற்றி போற்றியே! |
*** அம்பிகை அகவல் முற்றும் ***
|
நூற் பயன்:
அன்னையர் அந்தாதி மும்மாலை அம்மையர் சூடிடத் தொழுதாலே முன்னை வினைகள் முற்றாகும் முழுமை நிறைகும் வாழ்வாகும் பின்னை செழுமை மகிழ்வோடு பெருமை செம்மை நலமாகும் தன்னை உணர்ந்த செயலாலே தவறா வெற்றியும் சத்தியமே! |
* அன்னையர் அந்தாதி முற்றும் *
|
***
|
Showing posts with label மரபுக் கவிதை. Show all posts
Showing posts with label மரபுக் கவிதை. Show all posts
Monday, April 7, 2014
Tuesday, June 7, 2011
அன்னையர் அந்தாதி (பகுதி: 3)
|
அன்னையர் அந்தாதி
(பகுதி: 3)
|
|---|
|
2. திருமகள் அந்தாதி
|
|
இறை வணக்கம்:
மாதவன் மனத்திரு மங்கையேநின தருளன்றி யாதவம் வளமீயும் பூதலத்தே? - ஆதலுமாயுன் திருவடிக்கே சரணானோம் திருமகளே எமக்கென்றும் பெருநிதியப் பொருளாய்ப் பொழி. |
| அந்தாதிக் கட்டளை: செங்கமல அலர்மேல் செவ்விதழ் நறுமலராய் செங்கண் மாலரங்கச் செம்மனத் திருமடந்தாய் பிங்கலக் கைமாற்றில் பெருஞ்சிகை நெடியோன் சங்கமத் தாய்வைத்த செல்வத்திரு உறுபொருளே! உலகியலாய் உலகப்பருப் பொருண்மை உடைமையுமாய் கலவியலால் காதற்காமம் களிக்குமுயர் நனியுணர்வாய் நலமிகுக்கும் சம்பத்துமாய் நற்கதிதருஞ் சந்ததியுமாய் இலக்காயுறு நல்வரத்தாய் இலங்குமின்பத் திருமகளே! |
|
அந்தாதி:
1. அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்!
செங்கமல(ச்)
செழுமலரில் சீர்மல்கி
வாசஞ்செய் செம்பொருட் தங்கமலர் தாரணியாய் தாயுமாய் தாரகையாய் தாமரைக்கண் அங்கமுடை அம்போதி அத்தனவன் அகமலராய் அமர்ந்தேகி அங்கையில் அகமிளகி பெரும்பேறு அருள்நல்கும் அலர்மேலே! 2. அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்! அலர்மேல் அமர்அருள் அலைமகள் அன்னையாய் அகிலத்து மலர்மேல் எலாம்வள நலம்பொலி நாயகியாய் வையத்து நிலம்பால் வைதேகியாய் பைந்தமிழ் பாச்சூடியாய் நித்திலத்து சிலம்பால் சிந்தாமணி நகையேநின் திருவாய்ச் செவ்விதழே!
3. ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்!
செவ்விதழ் சேயிழையாய் பாலாழி திரளமுதச் செல்வியுனை செவ்வியத் தனபதிபால் கடனாகித் திருமணித்த செவ்வாயன் அவ்விதமே காத்துநின்றே காலமெலாங் கழிப்பதுவோ அக்கடன்? நவ்விநினது நாரணன்பால் நற்கருணை நவில்வாயே நறுமலரே!
4. ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்!
நறுமலராய் ஐம்பூதத்து பருப்பொருள் ஐம்பொறி நடைக்கூட மறுமலராய் அந்தரங்கக் கருப்பொருள் அகப்பை மனமடலாய் உறுமலராய் ஐயிந்திரிய தன்மாத்திரை ஐவுடம்பு உடனுறைச் செறுமலராய் ஏழ்தாது பிரபஞ்சவளர் பதிநாடிச் செங்கண்ணே!
5. இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்!
செங்கண் இயற்கை செயற்கை மாயையாய் செழுமதியாய் எங்கண் அஞ்ஞான அகத்துணர் இன்பதுன்ப பிரமையாய் அங்கண் விளையும் அறிவொளி விளக்கத்து அகிலமாய் வங்கண் யாங்கிலும் இலங்கும் இலக்குமி மாலரங்கமே!
6. இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்!
மாலரங்கச் சீதனமே! மண்ணகத்து மாற்றா மாற்றமாய் பாலரங்கத் தயிர்மோர் வெண்ணை நறுநெய் பாங்குறை வாலரங்கப் பருவவிதி வளமுடை மாற்றாய் வளர்நிறை சாலரங்கப் பெருநிதியச் சாதனமாய் செழிக்குஞ் செம்மனமே!
7. ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்!
செம்மனத் துரமொடு செழுநல் இலக்கொடு செய்வினை எம்மனங் கருத்தொடு இயங்குமோ ஆங்கண் இலங்கியும் கம்மனத் திறத்தொடு நற்கருமம் ஆற்றுமக் கடமையவர் தம்மனத் திருவாய் வருவாய் தருவாய் திருமடந்தே!
8. ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்!
திருமடந்தாய் அரவாதே அறிவாழ்வார் ஆழ்ந்தமனத் திருவிடத்துக் கருமடந்தாய் கரவாதே கருமவினை ஆன்றவர்பால் கருணைவளம் தருமடந்தாய் இரவாதே இருந்தாலும் இரங்கிநலம் தந்தவர்பால் பெருமடந்தாய் குறையாதே பன்மடங்கில் ஈந்தருளும் பிங்கலனே!
9. உலகத்தின் திருவாகி
உள்ளமதில் உறைமகள்!
பிங்கலக் கருணையே! பொருளன்றி பெருநிலத்தே பயனில்லையால் நங்கலப் பொருளிலாரை இல்லாரும் ஈந்தாருமே நயந்திலார்போல் மங்கலப் பொருளுயிரை மாய்க்காதே நம்பிக்கை மனவளத்தால் கங்கனங் கொண்டிலங்கி உலகூட்டிப் பரிமாறும் கைமாறே!
10. உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்!
கைமாற்றில் அறனீட்டம் கைவளமாய் நிலைநலக் களமீயும் வைமாற்றில் அதனீட்டங் கைத்துதவப் பெருக்காகி வளமீயும் மைமாற்றில் அதனாட்டம் வைத்தவுறு நஞ்சாகும் நலந்தேயும் பைமாற்றில் பலனீட்டம் கைமாற்றும் பஞ்சமும் பெருஞ்சிகையே!
11. ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்!
பெருஞ்சிகை(ப்) பெய்வளையே! பெருநிதியம் பெறுனர்பால் பெரும்பலந் தருஞ்சிகை அகநெய்வார் தகைப்பேணி முனைவர்பால் தனமளக்கும் அருஞ்சிகை அளவறிந்து செயலாக்கும் அனைவர்பால் அமுதளிக்கும் நெருஞ்சிகை நெய்வாச நறுமதிநின் நெஞ்சின்பால் நெடியோனே!
12. ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்!
நெடியோன் பெருமால் நெடுநல் அணங்காய் நின்மலர் மடிமேல் இருத்தியும் வறுமையில் உழலவும் உன்பதம் படியோர் வருந்தாமற் பல்வளம் கொழுகவும் பொருந்தாத் துடியிடை பொருந்தலும் அவரவர் தொல்வினைச் சங்கமமே!
13. எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்!
சங்கமத் திரட்டும் தாபரமும் நங்கையிற் சார்மையும் வெங்கம் கையறவு களையுங் கொடைதரு வினைக்கே பொங்கும் வல்நிதியம் நற்பணியும் எளிமையும் புரிவர்பால் தங்கமுதப் பெருநிதியே தளைக்கும் புண்ணியத் தாய்வைத்தே!
14. எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்!
தாய்வைத்த பெருநிதியம் தரணிவாழ் நல்வாய்ப்பும் தன்னுள்ளக மாய்வைத்த மாயையும் தேவையும் மிகுதேடலும் மனநிறைவுக் காய்வைத்த எதிர்பாராநல் யோகமும் ஞானமும் கைவளமும் சேய்வைத்த பேரின்பமும் இசைவாகும் நற்பெருஞ் செல்வத்திருவே!
15. ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்!
செல்வத்திரு நற்செழுமை அல்லலறு மிகுவின்பம் சேர்ந்திலங்கி இல்லத்திரு இன்மையும் இகழ்ச்சியும் அகற்றும்நல் இயல்பாயின் அல்லல்தரு மதிமயக்கும் அழுக்காறும் அகந்தையும் அதன்விளை மெல்லத்தரு பேராசையும் மறுமைக்கே வித்தாகும் உறுபொருளே!
16. ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்!
உறுபொருளே! கற்றார்க்கும் உற்றார்க்கும் மற்றார்க்கும் உய்வுதரும் நறுபொருளே! வையகத்தின் வளத்தையும் வைப்பார்க்கு நலத்தையும் இறுபொருளே! பகுத்தறிவாய் அனைத்திலும் பற்றகற்றும் இறுதிக்கும் வறுபொருளே! உளத்தாசை ஒறுத்தார்க்கே வயமாகும் உலகியலே!
17. ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்!
உலகியலாய் ஐம்புலமும் அகப்புறமும் இன்பதுன்பம் உய்த்துணரும் நிலவியலாய் தேவையிறும் பகர்பொருளும் நேசந்தரும் நுகர்பொருளும் அலகியலாய் இலக்கதிலும் அடைதலிலும் அனுபவமாய் அன்றிலறும் விலகியலாய் பெருஞ்சுனைக் களஞ்சியமாய் விளங்குநல் உலகப்பருவே!
18. ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்!
உலகப்பருப் பொருளாய் பொய்மெய் மாயத்திலும் உணர்விலும் கலகத்திரு காதலிலும் காமநிறைக் களிப்பிலும் கலப்பிலும் நிலவசத்திரு வனப்பிலும் செல்வநலச் செழிப்பிலும் நேசத்திலும் புலவசத்திரு பற்றலிலும் அற்றலிலும் பொழிந்திடும் பொருண்மையே!
19. ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்!
பொருண்மை ஒருங்கடை இலக்கால் வெல்மடி போற்றலும் அருண்மை வினையிடை திண்மை துணிவொடு ஆற்றலும் மருண்மை தூக்கொடு இருண்மை போக்கலும் மாற்றுமை வெருண்மை நீக்கலும் அன்னை வீரலக்குமி உடைமையே!
20. ஒருமை
பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்!
உடைமையுமாய் உயிரெழும் ஈட்டமுமாய் வளம்பொழிவல் ஊட்டமுமாய் நடைமையுமாய் நல்வினை நாட்டமுமாய் நலந்தழைக்கும் நோட்டமுமாய் படைமையுமாய் மாற்றத்தொடர் ஓட்டமுமாய் பருவகால ஆட்டமுமாய் கடைமையுமாய் பெருக்குநல் கூட்டமுமாய் கடைத்தேற்றுவாய் கலவியலாலே!
21. ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்!
கலவியலால் களிப்பாகிக் கசிந்துருகிக் கருவுயிராய்க் கனிவதுமாய் உலவியலால் மூவாசைக் கடலலைப் பெருமுகிலாய் உவப்பதுமாய் நிலவியலால் மும்மலத்து மும்மையுறு காரணியாய் நெஞ்சகத்துக் குலவியலால் சொட்டுமது போகரசங் கொட்டுங்கவி காதற்காமமே!
22. ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்!
காதற்காமம் கடைந்தேறக் கருணைவளம் களைநுதலும் காமதேனாய் மாதர்காமம் மடைமாறும் மனையறமும் மயக்கமறும் மங்கலமுமாய் நோதற்காமம் நல்குரவின் இடர்களைந்து நோன்மைநிறை நிலைப்பேறாய் கோதற்காமம் கொழிவிளைக் கோதனத்துக் கொடைவழிக் களிக்குமுயரே!
23. ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்!
களிக்குமுயர் பேரின்பத்து ஊற்றருவிப் பெட்டகமாய் கையிருப்பாய் அளிக்குமுயர் வாருதியில் பசுமனத்துப் பகப்பண்பாய் அன்பளிப்பாய் தளிக்குமுயர் தன்னலத்து அகவிருளைத் தாண்டிப்பின் திருவிளக்காய் நளிக்குமுயர் நல்மனத்து நற்பேறாய் நலமளிக்கும் நனியுணர்வே!
24. ஆக்கும் பொருளுமாகி
உலவவிடுந் திருமகள்!
நனியுணர்வாய் கருமவினைக் கருவறையாய் நன்நிலைமை நல்வாய்ப்புக் கனியுணர்வாய் கவனம்நிறை வினையறமாய் செய்வினைக் களப்பொலிவுத் தனியுணர்வாய் திருந்துவினை விழுமியமாய் தகைசால் திரவியத்திரு நுனியுணர்வாய் நாற்பொருள் நுண்ணுணரும் நற்பேறாய் நலமிகுக்குமே!
25. காடாகி
மலையாகிக் கடலாகும் பொழிலவள்!
நலமிகுக்கும் இயற்கை நிலமாகி மலையாகி நாடாகி வலமிகுக்கும் ஊற்றாகி ஆற்றாகி கடலாகி வானாகி தலமிகுக்கும் மழையாகி தளிராகி வளமாகி தனமாகி சலமிகுக்கும் சங்கமத்து வித்தாய் சான்றாகும் சம்பத்துமே!
26. காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்!
சம்பத்துமாய் மனைவாசல் நிலபுலத்து நன்மக்களுந் தனவளமாய் தம்பத்துமாய் மந்தைநிறை சமூகத்தாய் வாழ்வியல் சந்தையுமாய் பிம்பத்துமாய் வணிகவியல் பொருளியல் பெருகுநிலைப் பங்குமதாய் நம்பத்துமாய் இலங்குவழி நாணயமாய் விளங்குமெழில் நற்கதியே!
27. சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்!
நற்கதிதருஞ் செழுபயன் இகக்காரணி முன்வினை நற்பலனும் முற்பதிதரும் சுழல்விளை முற்றாஅவா மயல்வித்து மறுமையும் கற்பகந்தருங் கொழுநலங் கருதியாங்கு கைவண்ணங் கிட்டுதலும் சிற்சுகமருள் நிலைத்தலும் ஊழ்வினை செய்தவமே சந்ததியுமே!
28. சகமாகி
மாற்றாகிச் சகலமாகும் மாயவள்!
சந்ததியுமாய் பந்தமுமாய் சமமாகுஞ் சொந்தமுமாய் சம்பத்தாய் வந்ததுமாய் வருவதுமாய் மாற்றுமாய் மாற்றாநல் வரம்பிலாச் சிந்தையுமாய் நல்லறமாய் சீர்மைமிகு சௌபாக்கியத் தாயுமாய் எந்தையுமாய் இருக்கிறாய் மாயமுமாய் இலக்குமியே இலக்காயே!
29. தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்!
இலக்காயுறு உளப்பொருளாய் இயங்குநல் தூண்டலுமாய் இலங்கியும் கலக்காயுறு அகத்திருளாய் உழற்றுமதி கல்லாமையால் கிடப்பாயும் துலக்காயுறு துய்ப்பொருளாய் விளங்கிவல் பேராசையால் தொடராயும் நலக்காயுறு மறுமையாய்மீள் நன்னிலத்தில் தொழிற்படும் நல்வரத்தே!
30. தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்!
நல்வரத்தாய் நடைமுறை நடுவறத்து நல்வித்தாய் நாயகியாய் பல்வரத்தாய் பணிமுறை பண்பறத்து பணிவித்தாய் பார்கவியாய் நில்வரத்தாய் நேர்மறை நல்லறத்து நினைவித்தாய் நிம்மதியாய் இல்வரத்தாய் வாழ்வகை உயர்வித்து இருதயத்தாய் இலங்குமின்பமே!
31. நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்!
இலங்குமின்பத் திருமதியாய் எண்ணியவை எண்ணியாங்கு இயல்பவளாய் நிலங்குமின்பத் திருநிறையாய் நண்ணுவர்க்கே நலந்தரும் நிறைகுடமாய் விலங்குமின்பத் தவநெறியாய் பற்றறுக்கும் வினைவாணருக்கு மாத்திரமாய் துலங்குமின்பத் திருப்பொருளாய் முத்திநலத் துணைநல்கும் திருமகளே! 32. நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! திருமகளே! எண்மகளாய் மாயமும் மயக்கமும் தெளிவிக்கும் பெருமகளே! பொன்மகளாய் யோகமும் பெருநெறியும் பொலிவிக்கும் குருமகளே! செம்மகளாய் கருவிலுந் திருவாய்க் குபேரவருளைத் தருமகளே! எம்மகத்தே யாண்டுமே தகைத்திருவே செங்கமலமே! |
|
* திருமகள் அந்தாதி முற்றும் *
|
| திருமகள் அகவல்: (தலைப்புக் கவிதை) |
|
அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்! அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்! ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்! ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்! இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்! இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்! ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்! ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்! உலகத்தின் திருவாகி உள்ளமதில் உறைமகள்! உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்! ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்! ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்! எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்! எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்! ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்! ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்! ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்! ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்! ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்! ஒருமை பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்! ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்! ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்! ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்! ஆக்கும் பொருளுமாகி உலவவிடுந் திருமகள்! காடாகி மலையாகிக் கடலாகும் பொழிலவள்! காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்! சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்! சகமாகி மாற்றாகிச் சகலமாகும் மாயவள்! தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்! தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்! நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்! நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! திருமகள் போற்றி போற்றி போற்றியே! |
|
*** திருமகள் அகவல் முற்றும் ***
|
|
***
|
Tuesday, May 17, 2011
அன்னையர் அந்தாதி (பகுதி: 1)
|
அன்னையர் அந்தாதி
|
|
|---|---|
| காப்பு: | |
|
கன்னியர் தேவியர் கடவுட் பாகத்துறை
அன்னையர் அந்தாதி முனைந்திட - முன்னவா கற்பகப் பிள்ளாயுன் கழலடி தொழுதேன் நற்றமிட் சொல்லாய் நிறை! |
|
| பாயிர அகவல்: | |
|
கேண்மிர் கேண்மீர் கேளிர் கேண்மீர் செப்பலைக் கொஞ்சம் செவிமடு கேண்மீர் முக்கண் தேற்றிய முழுமதி ஈண்டு அக்கண் தோற்றிய அருளொளி எழுத்தை அகத்தில் விளைத்த அணங்கியர் கருத்தை இடக்கண் உருவகம் இலங்குதிரு மகளாய் வலக்கண் என்பதும் வளர்கலை மகளாய் முதற்கண் ஆவதும் மூத்தவள் பொருளாய் |
8 |
|
சடையோன் தரிக்கும்
முப்புறச் சடையாய் சபையோர் தைக்கும் முப்பொருள் விடையாய் பசுபதியார் தரும் பரம்பொருள் அறிந்து பாவையார் இறும் நறும்பொருள் உணர்ந்து உருப்பொருள் ஆகிய கலைமகள் தமையும் பருப்பொருள் ஆகிய திருமகள் தனையும் கருப்பொருள் ஆகிய பெருமகள் உமையும் திருப்பொருள் ஏகிய கருப்பொருள் ஆக்கி |
16 |
|
அத்தன் இயம்பும் அருமை உணர்ந்து சித்தம் பயின்று செழுமை பயின்று அவனவள் காட்டும் அற்புதப் பொருளை அரவரவர் தீட்டும் அகப்பொருள் நலனை அம்மையர் ஆகிய மும்மகள் என்றும் மும்மகள் ஆகிய அன்னையர் என்றும் முன்னையர் உள்ளும் முந்தை வினையை அன்னையர் மெய்மை அந்தாதிப் பாவாய் |
24 |
|
கலைமகள் ஊட்டிட தமிழ்ப்பால் உண்டு கருத்தவள் காட்டிட காதற்பால் கொண்டு அந்தாதி அருளிட கட்டளைப் படிவம் ஆதிகள் விரியும் கட்டளைப் படியும் அமையுங் கவிதை அற்புதந் தீட்டி அணையா மனதுள் நற்பதம் மூட்டி அடுத்தோர் புதுமையும் அகத்தே இயம்பி அடுக்கும் முதலிலும் அகவல் விளம்பி |
32 |
|
வடகலை தென்கலை கீழ்க்கலை மேற்கலை வாழ்கலை என்றுமே வகைதொகை உணரா இன்னமுந் தமிழின் இலக்கணந் தெரியா இதுவரை எதுவுமே நலத்தினைப் புரியா யாவுமே அறியா இளையோன் என்பால் மேவிடுங் கலையா மனந்தனை வழங்கி தன்னை உணர்த்தி தமிழும் உணர்த்தி என்னில் முழுதுற எண்ணம் ஆகியே |
40 |
|
அன்னை அந்தாதி ஆக்கிடப் பணிக்க பிள்ளைத் தமிழால் பேசிடத் துணிந்து குருவருள் கனிய உளமுற வணங்கி பரமனின் அடிமலர் பாதம் பணிந்தே பக்தியில் மலரைப் பிணைந்து தொடுக்க முத்தமிழ் அன்னை முனைந்து கொடுக்க உத்தம புத்திரன் உரைப்பதும் ஈங்கே சத்திய மொழியால் அன்னை அந்தாதி! |
48 |
|
மறைபொருள் இஃதை மனனம் செய்தே மனத்தால் உணர்ந்து தியானம் புரிகின் இறைநலங் கனியும் இனிமை பெருகும் குறைகள் அகலும் தடைகள் விலகும்! புரியாப் பொருளும் புலப்படக் கூடும்! தெரியாத் திறமும் வெளிவரக் கூடும்! நிறைகள் நிறைத்து வளம்பல சேரும் இறையின் அருளே! இறைவா அருளே! |
56 |
|
வையகம் உய்க! வாழ்க்கை உய்க! தாயகம் உய்க! தமிழும் உய்க! கேண்மீர் உய்க! கேண்மை உய்க! அண்டம் எங்கும் அன்பே உய்க! பசுபதி ஆகினன் பாதம் போற்றி! பாகம் பிரியாப் பகவதி போற்றி! தம்முள் விரியும் தமிழே போற்றி! எம்முள் நிறைகும் மும்மகள் அம்மையரே போற்றி! போற்றி! போற்றியே! |
64 |
|
*** பாயிர அகவல் முற்றும் ***
|
|
| காணிக்கை: (சமர்ப்பணம்) | |
|
தமக்கைக்கு தாரத்திற்கு தாயாருக்கு சீர்முறையிலும் சமர்த்துப் புத்திரனுக்கு முழுமையிலும் - தமக்குள் அரும்பிய அருட்பாவை அன்னையர் அந்தாதியாய் விரும்பிப் படைத்தோம் விருந்து! |
|
| அர்ப்பணம்: | |
|
ஆச்சி கலைவாணிக்கு கலைமகள் அந்தாதியும் - மனையாள் ஆச்சி உண்ணாமலைக்கு அலைமகள் அந்தாதியும் - அன்னை ஆச்சி மீனாட்சிக்கு மலைமகள் அந்தாதியும் - எங்களாருயிர் அன்புப் புத்திரன் ஹரிராகவனிற்கு அனைத்துமாயும் ஆகுமே அன்னையர் அந்தாதி அர்ப்பணம். |
|
|
அன்னையர் அந்தாதி
|
|
| நூல்: | |
|
இறை வணக்கம்: சென்னியுட் செறிந்து சிந்தையுட் சொரியும் அன்னையர் மும்மகள் அந்தாதி நன்னெறி விரிவருட் பொருளாய் விளைந்திடப் பணிவாம் கரிமுகன் பதமலர்த் தாழ்! |
|
| என்றும் மும்மகளே துணை! | |
| 1. கலைமகள் அந்தாதி: | |
| http://thamilkavithaikal.blogspot.com/2011/05/2.html | |
| 2. திருமகள் அந்தாதி (அலைமகள் அந்தாதி): | |
| http://thamilkavithaikal.blogspot.in/2011/06/3.html | |
| 3. அம்பிகை அந்தாதி (மலைமகள் அந்தாதி) : | |
| http://thamilkavithaikal.blogspot.in/2014/02/4.html | |
| அன்னையர் அந்தாதி விளக்கம்: (பொழிப்புரை) Album | |
| https://www.facebook.com/media/set/?set= a.1400954103470841.1 | |
|
*** அன்னையர் அந்தாதி
முற்றும் ***
| |
Labels:
Andhadhi,
Bhakthi,
Tamil,
Tamil Marabu,
அந்தாதி,
தமிழ்,
பக்தி,
மரபு,
மரபுக் கவிதை
Subscribe to:
Posts (Atom)


