|
அன்னையர் அந்தாதி
|
|
|---|---|
| காப்பு: | |
|
கன்னியர் தேவியர் கடவுட் பாகத்துறை
அன்னையர் அந்தாதி முனைந்திட - முன்னவா கற்பகப் பிள்ளாயுன் கழலடி தொழுதேன் நற்றமிட் சொல்லாய் நிறை! |
|
| பாயிர அகவல்: | |
|
கேண்மிர் கேண்மீர் கேளிர் கேண்மீர் செப்பலைக் கொஞ்சம் செவிமடு கேண்மீர் முக்கண் தேற்றிய முழுமதி ஈண்டு அக்கண் தோற்றிய அருளொளி எழுத்தை அகத்தில் விளைத்த அணங்கியர் கருத்தை இடக்கண் உருவகம் இலங்குதிரு மகளாய் வலக்கண் என்பதும் வளர்கலை மகளாய் முதற்கண் ஆவதும் மூத்தவள் பொருளாய் |
8 |
|
சடையோன் தரிக்கும்
முப்புறச் சடையாய் சபையோர் தைக்கும் முப்பொருள் விடையாய் பசுபதியார் தரும் பரம்பொருள் அறிந்து பாவையார் இறும் நறும்பொருள் உணர்ந்து உருப்பொருள் ஆகிய கலைமகள் தமையும் பருப்பொருள் ஆகிய திருமகள் தனையும் கருப்பொருள் ஆகிய பெருமகள் உமையும் திருப்பொருள் ஏகிய கருப்பொருள் ஆக்கி |
16 |
|
அத்தன் இயம்பும் அருமை உணர்ந்து சித்தம் பயின்று செழுமை பயின்று அவனவள் காட்டும் அற்புதப் பொருளை அரவரவர் தீட்டும் அகப்பொருள் நலனை அம்மையர் ஆகிய மும்மகள் என்றும் மும்மகள் ஆகிய அன்னையர் என்றும் முன்னையர் உள்ளும் முந்தை வினையை அன்னையர் மெய்மை அந்தாதிப் பாவாய் |
24 |
|
கலைமகள் ஊட்டிட தமிழ்ப்பால் உண்டு கருத்தவள் காட்டிட காதற்பால் கொண்டு அந்தாதி அருளிட கட்டளைப் படிவம் ஆதிகள் விரியும் கட்டளைப் படியும் அமையுங் கவிதை அற்புதந் தீட்டி அணையா மனதுள் நற்பதம் மூட்டி அடுத்தோர் புதுமையும் அகத்தே இயம்பி அடுக்கும் முதலிலும் அகவல் விளம்பி |
32 |
|
வடகலை தென்கலை கீழ்க்கலை மேற்கலை வாழ்கலை என்றுமே வகைதொகை உணரா இன்னமுந் தமிழின் இலக்கணந் தெரியா இதுவரை எதுவுமே நலத்தினைப் புரியா யாவுமே அறியா இளையோன் என்பால் மேவிடுங் கலையா மனந்தனை வழங்கி தன்னை உணர்த்தி தமிழும் உணர்த்தி என்னில் முழுதுற எண்ணம் ஆகியே |
40 |
|
அன்னை அந்தாதி ஆக்கிடப் பணிக்க பிள்ளைத் தமிழால் பேசிடத் துணிந்து குருவருள் கனிய உளமுற வணங்கி பரமனின் அடிமலர் பாதம் பணிந்தே பக்தியில் மலரைப் பிணைந்து தொடுக்க முத்தமிழ் அன்னை முனைந்து கொடுக்க உத்தம புத்திரன் உரைப்பதும் ஈங்கே சத்திய மொழியால் அன்னை அந்தாதி! |
48 |
|
மறைபொருள் இஃதை மனனம் செய்தே மனத்தால் உணர்ந்து தியானம் புரிகின் இறைநலங் கனியும் இனிமை பெருகும் குறைகள் அகலும் தடைகள் விலகும்! புரியாப் பொருளும் புலப்படக் கூடும்! தெரியாத் திறமும் வெளிவரக் கூடும்! நிறைகள் நிறைத்து வளம்பல சேரும் இறையின் அருளே! இறைவா அருளே! |
56 |
|
வையகம் உய்க! வாழ்க்கை உய்க! தாயகம் உய்க! தமிழும் உய்க! கேண்மீர் உய்க! கேண்மை உய்க! அண்டம் எங்கும் அன்பே உய்க! பசுபதி ஆகினன் பாதம் போற்றி! பாகம் பிரியாப் பகவதி போற்றி! தம்முள் விரியும் தமிழே போற்றி! எம்முள் நிறைகும் மும்மகள் அம்மையரே போற்றி! போற்றி! போற்றியே! |
64 |
|
*** பாயிர அகவல் முற்றும் ***
|
|
| காணிக்கை: (சமர்ப்பணம்) | |
|
தமக்கைக்கு தாரத்திற்கு தாயாருக்கு சீர்முறையிலும் சமர்த்துப் புத்திரனுக்கு முழுமையிலும் - தமக்குள் அரும்பிய அருட்பாவை அன்னையர் அந்தாதியாய் விரும்பிப் படைத்தோம் விருந்து! |
|
| அர்ப்பணம்: | |
|
ஆச்சி கலைவாணிக்கு கலைமகள் அந்தாதியும் - மனையாள் ஆச்சி உண்ணாமலைக்கு அலைமகள் அந்தாதியும் - அன்னை ஆச்சி மீனாட்சிக்கு மலைமகள் அந்தாதியும் - எங்களாருயிர் அன்புப் புத்திரன் ஹரிராகவனிற்கு அனைத்துமாயும் ஆகுமே அன்னையர் அந்தாதி அர்ப்பணம். |
|
|
அன்னையர் அந்தாதி
|
|
| நூல்: | |
|
இறை வணக்கம்: சென்னியுட் செறிந்து சிந்தையுட் சொரியும் அன்னையர் மும்மகள் அந்தாதி நன்னெறி விரிவருட் பொருளாய் விளைந்திடப் பணிவாம் கரிமுகன் பதமலர்த் தாழ்! |
|
| என்றும் மும்மகளே துணை! | |
| 1. கலைமகள் அந்தாதி: | |
| http://thamilkavithaikal.blogspot.com/2011/05/2.html | |
| 2. திருமகள் அந்தாதி (அலைமகள் அந்தாதி): | |
| http://thamilkavithaikal.blogspot.in/2011/06/3.html | |
| 3. அம்பிகை அந்தாதி (மலைமகள் அந்தாதி) : | |
| http://thamilkavithaikal.blogspot.in/2014/02/4.html | |
| அன்னையர் அந்தாதி விளக்கம்: (பொழிப்புரை) Album | |
| https://www.facebook.com/media/set/?set= a.1400954103470841.1 | |
|
*** அன்னையர் அந்தாதி
முற்றும் ***
| |
Showing posts with label Tamil Marabu. Show all posts
Showing posts with label Tamil Marabu. Show all posts
Tuesday, May 17, 2011
அன்னையர் அந்தாதி (பகுதி: 1)
Labels:
Andhadhi,
Bhakthi,
Tamil,
Tamil Marabu,
அந்தாதி,
தமிழ்,
பக்தி,
மரபு,
மரபுக் கவிதை
Monday, February 14, 2011
வாழ்க்கை ஏதுக்கடா?
| வாழ்க்கை ஏதுக்கடா? | |
|---|---|
| 1 | நல்லதை நினைக்காமல் - உனக்கு |
| 2 | அன்பினை வழங்காமல் - உனக்கு அண்டமும் ஏதுக்கடா? - மனிதா அறத்தினை ஒழுகாமல் - உனக்கு ஆக்கங்கள் ஏதுக்கடா?
|
| 3 | பண்பினை வளர்க்காமல் - உனக்கு பாசங்கள் ஏதுக்கடா? - மனிதா பகைமை களையாமல் - உனக்கு படிப்பினை ஏதுக்கடா?
|
| 4 | நேர்மை நில்லாமல் - உனக்கு நெஞ்சம் ஏதுக்கடா? - மனிதா கூர்மை இல்லாமல் - உனக்கு குழப்பம் ஏதுக்கடா?
|
| 5 | தாய்மை போற்றாமல் - உனக்கு தாயகம் ஏதுக்கடா? - மனிதா வாய்மை காக்காமல் - உனக்கு வாய்ப்பும் ஏதுக்கடா?
|
| 6 | பாதியில் பெண்ணின்றேல் - உனக்கு பயணம் ஏதுக்கடா? - மனிதா நீதியில் கண்ணின்றேல் - உனக்கு ஞானம் ஏதுக்கடா?
|
| 7 | களவுகள் எளிதாயின் - உனக்கு காவலன் ஏதுக்கடா? - மனிதா இலவசம் வலிதாயின் - உனக்கு யாதுமே ஏதுக்கடா?
|
| 8 | கடமையும் இலதாயின் - உனக்கு கவலை ஏதுக்கடா? - மனிதா குடிசையும் இலதாயின் - உனக்கு குடும்பம் ஏதுக்கடா?
|
| 9 | சாதிகள் ஏதுக்கடா? - உனக்கு சண்டைகள் ஏதுக்கடா? - மனிதா சமரசம் காணாமல் - உனக்கு சமயங்கள் ஏதுக்கடா?
|
| 10 | பேதங்கள் ஏதுக்கடா? - உனக்கு பேதமை ஏதுக்கடா? - மனிதா வாதங்கள் ஏதுக்கடா? - உனக்கு வன்மங்கள் ஏதுக்கடா?
|
| 11 | மோதல்கள் ஏதுக்கடா? - உனக்கு மோகங்கள் ஏதுக்கடா? - மனிதா காதலே இல்லாமல் - உனக்கு காமம் ஏதுக்கடா?
|
| 12 | சோதனை செய்யாமல் - உனக்கு சோகங்கள் ஏதுக்கடா? - மனிதா சாதனை இல்லாமல் - உனக்கு சரித்திரம் ஏதுக்கடா?
|
| 13 | வல்லினம் ஏதுக்கடா? - உனக்கு மெல்லினம் ஏதுக்கடா? - மனிதா இடையினம் நாடாமல் - உனக்கு இன்பம் ஏதுக்கடா?
|
| 14 | வம்புகள் ஏதுக்கடா? - உனக்கு வன்முறை ஏதுக்கடா? - மனிதா இன்பத்தை நாடாமல் - உனக்கு துன்பங்கள் ஏதுக்கடா?
|
| 15 | மதவெறி ஏதுக்கடா? - உனக்கு மொழிவெறி ஏதுக்கடா? - மனிதா இனவெறி ஏதுக்கடா? - உனக்கு பணவெறி ஏதுக்கடா?
|
| 16 | ஆதியை அறியாமல் - உனக்கு ஆன்மா ஏதுக்கடா? - மனிதா சோதியைக் காணாமல் - உனக்கு சுயமும் ஏதுக்கடா?
|
| 17 | தேடலும் இல்லாமல் - உனக்கு தெய்வம் ஏதுக்கடா? - மனிதா தேம்பலும் நில்லாமல் - உனக்கு தேசம் ஏதுக்கடா?
|
| 18 | தீமைகள் விலகாமல் - உனக்கு தேர்ச்சியும் ஏதுக்கடா? - மனிதா தீட்டுகள் அகலாமல் - உனக்கு தேசியம் ஏதுக்கடா?
|
| 19 | பொருளே அறியாமல் - உனக்கு போதனை ஏதுக்கடா? - மனிதா இருளே அகலமால் - உனக்கு இதயம் ஏதுக்கடா?
|
| 20 | பொன்னகை ஏதுக்கடா? - உனக்கு பொய்மை ஏதுக்கடா? - மனிதா புன்னகை புரியாமல் - உனக்கு புதுமையும் ஏதுக்கடா?
|
| 21 | எளிமை கொள்ளாமல் - உனக்கு ஏளனம் ஏதுக்கடா? - மனிதா ஏழ்மை கொல்லாமல் - உனக்கு ஏற்றம் ஏதுக்கடா?
|
| 22 | அச்சம் ஏதுக்கடா? - உனக்கு ஆண்மை ஏதுக்கடா? - மனிதா பிச்சைப் பொருளாலே - உனக்கு பிழைப்பும் ஏதுக்கடா?
|
| 23 | உழைப்பே இல்லாமல் - உனக்கு உணவும் ஏதுக்கடா? - மனிதா பிழைப்பே இல்லாமல் - உனக்கு பேச்சும் ஏதுக்கடா?
|
| 24 | புனிதம் ஏதுக்கடா? - உனக்கு புத்தியும் ஏதுக்கடா? - மனிதா மனிதம் மதிக்காமல் - உனக்கு மாண்பும் ஏதுக்கடா?
|
| 25 | மயக்கம் ஏதுக்கடா? - உனக்கு மவுனம் ஏதுக்கடா? - மனிதா தயக்கம் ஏதுக்கடா - உனக்கு தைரியம் ஏதுக்கடா?
|
| 26 | உயிரினை மதிக்காமல் - உனக்கு உணர்வுகள் ஏதுக்கடா? - மனிதா உரிமையை மதிக்காமல் - உனக்கு விடுதலை* ஏதுக்கடா? * சுதந்திரம்
|
| 27 | பெருமையை துதிக்காமல் - உனக்கு பிறப்பும் ஏதுக்கடா? - மனிதா உறவினை மதிக்காமல் - உனக்கு சிறப்பும் ஏதுக்கடா?
|
| 28 | பிரிவுகள் ஏதுக்கடா? - உனக்கு பிளவுகள் ஏதுக்கடா? - மனிதா விருப்புகள் குறையாமல் - உனக்கு வெறுப்புகள் ஏதுக்கடா?
|
| 29 | சிறகுகள் இல்லாமல் - உனக்கு சிறைகள் ஏதுக்கடா? - மனிதா வரையறை இல்லாமல் - உனக்கு வேட்கை ஏதுக்கடா?
|
| 30 | உதவிகள் செய்யாமல் - உனக்கு உடலும் ஏதுக்கடா? - மனிதா உயர்வினை அடையாமல் - உனக்கு உளமும் ஏதுக்கடா?
|
| 31 | சீர்மை படையாமல் - உனக்குச் சிந்தனை ஏதுக்கடா? - மனிதா மூர்க்கம் உடையாமல் - உனக்கு வந்தனை ஏதுக்கடா?
|
| 32 | மேன்மை அடையாமல் - உனக்கு மெத்தனம் ஏதுக்கடா? - மனிதா மேதமை அடையாமல் - உனக்கு தத்துவம் ஏதுக்கடா?
|
| 33 | கேண்மை பிடிக்காமல் - உனக்கு கேள்வி ஏதுக்கடா? - மனிதா கீழ்மை தடுக்காமல் - உனக்கு கேளிக்கை ஏதுக்கடா?
|
| 34 | ஆட்டம் ஏதுக்கடா? - உனக்கு அகந்தை ஏதுக்கடா? - மனிதா பாட்டம் ஏதுக்கடா? - உனக்கு பற்றும் ஏதுக்கடா?
|
| 35 | வாக்கே தெளியாமல் - உனக்கு வாட்டம் ஏதுக்கடா? - மனிதா வஞ்சகம் ஒழியாமல் - உனக்கு ஓட்டும் ஏதுக்கடா?
|
| 36 | ஆக்கம் புரியாமல் - உனக்கு ஆத்திரம் ஏதுக்கடா? - மனிதா நோக்கே தெரியாமல் - உனக்கு வாழ்க்கை ஏதுக்கடா? |
| *** | |
Labels:
Philosophy,
Social,
Tamil Marabu,
சமூகம்,
தத்துவம்,
மரபு,
வாழ்க்கை
Subscribe to:
Posts (Atom)
