தமிழர் உலகம்! |
கிளைகளில் கூடு கட்டினால் வேரிலே தீ; கிளையில் இலை துளிர்த்தால் வேரிலே வென்னீர் கிளைகளிலும் பல வேளைகளில் இலைகள் உதிரும் வெட்கத்தைத் தொலைத்த வேர்களில் சாதனை மவுனம் மகரந்தச் சேர்கைக்காக அலைகிறது மன்மத அம்புகள் நகல்களின் புதுப்பிப்பில் நக்கலாய் நோபல் கனவுகள் உறக்க உல்லாசத்தில் விழிக்க மறுக்கும் மாக்கள் எச்சில் சுகத்தில் குரைக்கும் சில்லறை ஜால்ராக்கள் சுரண்டலின் மிச்சத்தில் எலும்பாய் சோம்பல் சாலைகள் சுய முன்னேற்றங்கள் இடைத் தரகர் பேரத்தில் இலவச முதலீட்டில் கொழித்துச் செழிக்கிறது கொள்ளை மறக்காமல் தமிழுக்கும் அவ்வப்போது இலஞ்ச அர்ச்சனை இணையமா? உலகமா? இசையா. இணையா இதயங்கள் போட்டியால் அல்ல பொறாமையால் புகையும் எரிச்சல்கள் திருட்டையும் ரசிக்கும் மாந்தரின் இளித்தவாய் வேடிக்கை நண்டுக் குணத்தால் என்றுமே நொண்டும் குதிரை சண்டிமாடாய் தனித்தீவாய் முன்னேற மறுக்கும் சமூகம் அறிவிலிகள் தேசத்தில் என்றும் அறிவாளிகள் சிறுபான்மை வீரியம் கொண்ட வித்துகள் மாத்திரம் காற்றில் நம்பிக்கை ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”! வசந்தம் என்பதும் சுழற்சியில் நிச்சயிக்கப்பட்ட விதியே! |
*** |
Monday, December 20, 2010
தமிழர் உலகம்!
Subscribe to:
Posts (Atom)