எதிர்வினைப் பலன்கள் ஏன்? |
|
கொள்ளை அடிப்போர் வள்ளல்கள் போலவும் கோவிலை இடிப்போர் சாமியைப் போலவும் காட்டிக் கொடுப்போர் வீரர்கள் போலவும் கூட்டிக் கொடுப்போர் தொண்டர்கள் போலவும் தமிழே அல்லாதோர் தமிழர்கள் போலவும் தன்னலம் மிக்கோர் தலைவர்கள் போலவும் பிள்ளைகள் அற்றோர் தந்தைகள் போலவும் காமத் தேடிகள் அர்ச்சகர் போலவும் சுயநலப் பேதைகள் அரசினை ஆள்வதும் பாதணி ஆண்ட பாரதம் என்பதும் ’நோ-பல்’லைக் கோரிப் பல்லை இளிப்பதும் சந்தியில் நிற்போர் சாவினை ஏகினும் உதவா திட்டத்தை அமல் படுத்துவதும் துன்புறு மாந்தரைப் பங்கு வைப்பதும் பத்தினியர் எல்லாம் பரத்தையர் ஆவதும் வேலையும் அற்றுச் சாலையில் இருப்பதும் |
|
*** English Translation: Why opposite results? |
Friday, December 11, 2009
எதிர்வினைப் பலன்கள் ஏன்?
(மகாகவி பாரதிக்குச் சமர்ப்பணம்)
Labels:
Why opposite results,
எதிர்வினைப் பலன்கள் ஏன்,
பாரதி
Subscribe to:
Post Comments (Atom)
இன்றைய தமிழ்நாட்டின் நிலையை இதற்கு மேல் தெளிவாக விளக்கமுடியாது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்றைய அரசியலும் நாட்டின் நிலையும் கவிதை முழுவது அப்படியே வியாபித்திருக்கிறது. இந்த கவிதையை மட்டும் யாராவது என்னிடம் காட்டி "இது யார் எழுதியது என்று கண்டுபிடிக்கச்சொன்னால்?" நிச்சயம் நான் பாரதி என்றே சொல்லியிருப்பேன். அந்த அளவுக்கு ரொம்ப அற்புதமாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், பதிவிற்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் நண்பர் நாட்டமை மற்றும் நிலோஃபர் அன்பரசு அவர்களே.
ReplyDeleteபாரதி மகாகவி. அவரின் ஆளுகையில் நான் ஒரு சிறு துளி. அவ்வளவே. பாரதியையும், கண்ணதாசனையும் நான் அதிகம் ரசிக்கிறேன். எனவே அவர்கள் என்னில் பிரதிபலிக்கலாமென நினைக்கிறேன். நன்றி.
நண்பர்களே மீண்டும் ஒரு கவிதையில் சந்திப்போம்.
ARPUTHAM............
ReplyDeleteThank you satiz.
ReplyDeleteநாட்டில் நடக்கின்ற நாடகத்தை நயமாகவும் நன்றாகவும் கவிதையில் உரைத்தீர். எழுதிய எண்ணங்களுக்கு என் வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அருண். மீண்டும் வருக.
ReplyDeleteஉத்தமபுத்ரா!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா, கவிதைகளில் நல்ல வீச்சம், சொல்லாடல் இருக்கிறது!... நிறைய எழுதுங்கள். தொடர்கிறேன், நண்பர்களுக்கும் சொல்கிறேன்...
Word Verification எடுத்துவிடுங்கள். பின்னூட்டமிட சிரமமாயிருக்கிறது!
பிரபாகர்.
தங்களின் வருகைக்கும், பதிவிற்கும் முக்கியமாக settings செய்யவேண்டிய மாற்றத்தை எடுத்துக் கூறியதற்கும் நன்றிகள் நண்பர் பிரபாகர் அவர்களே.
ReplyDeleteதாங்கள் பரிந்துரைத்தபடி இப்போது Word Verification ஐ எடுத்து விட்டேன். உங்களால் புதியதையும் கற்றேன். அதற்காக மிக்க நன்றி.
நேரம் கிட்டுகையில் நிச்சயம் புதியவற்றை முயற்சிக்கிறேன். தொடரும் உங்களைப் போன்றோரின் பதிவுகள் நிச்சயம் ஊக்கம் தருகின்றன.
"தமிழே அல்லாதோர் தமிழர் போலவும்"
ReplyDeleteதற்சமய தமிழ்நாடு இப்படிதான் உள்ளது,
தமிழில் பேசுவதே அவமானமாக கருதும் நம் சில தமிழர்களால் விதைத்த விதைகள்,
தமிழே அல்லாதோர் தமிழர் நம் தமிழையாவது காப்பற்றுகிறார்களே!
arumai.valthukkal.
ReplyDelete