Friday, December 11, 2009

எதிர்வினைப் பலன்கள் ஏன்?

(மகாகவி பாரதிக்குச் சமர்ப்பணம்)

எதிர்வினைப் பலன்கள் ஏன்?

கொள்ளை அடிப்போர் வள்ளல்கள் போலவும்
கோவிலை இடிப்போர் சாமியைப் போலவும்
காட்டிக் கொடுப்போர் வீரர்கள் போலவும்
கூட்டிக் கொடுப்போர் தொண்டர்கள் போலவும்
தமிழே அல்லாதோர் தமிழர்கள் போலவும்
தன்னலம் மிக்கோர் தலைவர்கள் போலவும்

பிள்ளைகள் அற்றோர் தந்தைகள் போலவும்
பேதலி யெல்லாம் மேதைகள் போலவும்
அறிவிலி மண்டுகள் அறிஞர்கள் போலவும்
ஆற்றல் அற்றவர் கவிஞர்கள் போலவும்
கொலைதனைச் செய்வோர் கலைஞர்கள் போலவும்
குடும்பம் நடத்துவோர் துறவிகள் போலவும்

காமத் தேடிகள் அர்ச்சகர் போலவும்
கயமை உடையோர் நேர்மையர் போலவும்
குற்றம் இழைப்பவர் நீதியர் போலவும்
குறைகள் அற்றவர் கைதிகள் போலவும்
பிழைக்க வந்தோர் மன்னர்கள் போலவும்
பெருமைச் சந்ததி அகதிகள் போலவும்

சுயநலப் பேதைகள் அரசினை ஆள்வதும்
சொந்தமும் பந்தமும் மந்திரி ஆவதும்
பதவியில் இருப்போர் போதையில் ஆழ்வதும்
கோழையர் கூட தேர்தலில் ’வெல்வதும்’
லஞ்சம் பெறுவோர் சஞ்சலம் அறுப்பதும்
வஞ்சனை செய்வோர் கொஞ்சி மகிழ்வதும்

பாதணி ஆண்ட பாரதம் என்பதும்
பாதச் செருப்பாய் உழைப்பேன் என்பதும்
வாக்கை ’வாங்கி’ வெற்றி என்பதும்
’வாரிசே’ ’மக்கள் ஆட்சி’ என்பதும்
தம்மைப் போற்றின் பேரரசு என்பதும்
தமக்கும் வேண்டும் பரிசில்கள் என்பதும்

’நோ-பல்’லைக் கோரிப் பல்லை இளிப்பதும்
’சா’கித்தியம் நாடிச் சாடை உரைப்பதும்
கிட்டிய வரையில் இலாபம் பார்ப்பதும்
திட்டம் தீட்டியே திருடிச் சேர்பதும்
சங்கதி எதுவும் இல்லை எனினும்
சாதித்தோம் என்றே சத்தியம் செய்வதும்

சந்தியில் நிற்போர் சாவினை ஏகினும்
சாகச நாடகம் நடத்தி முடிப்பதும்
சந்திலே புகுந்து சிந்து படிப்பதும்
சமயம் பார்த்து நொந்து நடிப்பதும்
முதலைக் கண்ணீர் அழுகை விடுப்பதும்
முத்தமிழ்ச் சொத்தை முழுவதும் அடிப்பதும்

உதவா திட்டத்தை அமல் படுத்துவதும்
உலக வங்கிக்கே அடகு வைப்பதும்
ஊழலே வாழ்வாய் பிழைத்துக் கிடப்பதும்
ஊரை அடித்து உலையில் வைப்பதும்
ஆட்சியில் அமர்ந்தால் ’ஆண்டவன்’ என்பதும்
ஆணவம் கொண்டு ஆடித் திளைப்பதும்

துன்புறு மாந்தரைப் பங்கு வைப்பதும்
தொட்டவர் எல்லாம் சுயநலம் பார்ப்பதும்
தூங்குவோர் விழித்தால் திசை திருப்புவதும்
துணிந்தோர் மனதில் மடமை வளர்ப்பதும்
தொடரும் நாடகம் நியாயம் என்பதும்
நிகழ்ந்தவை எல்லாம் நல்லன என்பதும்

பத்தினியர் எல்லாம் பரத்தையர் ஆவதும்
உத்தமர் எல்லாம் உரிமை இழப்பதும்
தீங்கிற்குத் தீங்கே தீர்வு என்பதும்
தீவிர வாதத்திற்கு மருந்ததே என்பதும்
தேசப் பிதாவை கேலி செய்வதும்
தேசத்தை ’நடிகர்’ வசமே விடுப்பதும்

வேலையும் அற்றுச் சாலையில் இருப்பதும்
விதியெனெ நொந்து வீழ்ந்து கிடப்பதும்
மதுவினில் மயங்கி மானம் இழப்பதும்
’மதத்தினை’ வளர்த்து மானுடம் கெடுப்பதும்
பழமை வினையின் பழியே என்பதா?
பாமர மனிதரின் பேதமை என்பதா?

வானமும் பூமியும் நிச்சயம் என்றால்
வளர்பிறை கதிரும் சத்தியம் என்றால்
அரசியல் பிழையை அறந்தான் விடுமா?
அடுக்கிய பாவம் அதுவாய்க் கெடுமா?
முன்வினை பின்வினை என்பது மெய்யா?
முதுமொழிக் கூற்று அனைத்தும் பொய்யா?

பொய்யும் புரட்டும் உயர்நிலை பெறுமா?
பொருளினைச் சுருட்டின் புகழ்தான் வருமா?
அழுதே நின்றால் கருணை வருமா?
அனுதாபம் ஒன்றே வாழ்வைத் தருமா?
வஞ்சித்து வாழ்ந்தால் வாழ்க்கை ஆகுமா?
வாடித் துடித்தால் துன்பம் போகுமா?

நெஞ்சின் அயர்ச்சி நிலையைத் தீர்க்குமா?
நினைவுத் தளர்ச்சி கவலை போக்குமா?
வேடிக்கை கண்டால் உணவு தேறுமா?
வேதனை எல்லாம் தானாய் மாறுமா?
முயற்சியே இன்றி வெற்றி கிட்டுமா?
முடங்கிப் படுத்தால் மேன்மை எட்டுமா?

சந்ததி என்பது சுயமாய் வருமா?
சங்கடம் என்றால் சஞ்சலம் விடுமா?
இயங்காது இருத்தல் இயற்கை ஆகுமா?
இறந்து போவதே பொறுமை ஆகுமா?
திருந்தா அறிவால் பொறுப்புத் தீருமா?
தெய்வம் இகழ்ந்தால் விருப்பங் கூடுமா?

தீமை வளர்த்தல் தெளிவுடைப் பொருளா?
தீராத் துயரம் தெய்வத்தின் அருளா?
எதிர்மறைப் பலனே இயற்கையின் விதியா?
இரவும் பகலும் இறைவனின் சதியா?
வாய்மை என்பது ஊமையின் மொழியா?
வாய்ப்பினை இழப்பது அறிவுடைச் செயலா?

உழைத்தவர் இனத்தே பட்டினிச் சாவா?
உலுத்தர் கூட்டம் கோட்டையில் வாழ்வா?
கோட்டை என்பது கொள்ளையர் அறையா?
கூடித் திருடும் கூட்டணிக் கடையா?
தூய்மை என்பது தொலைந்த சரக்கா?
துயரம் என்பது தொடரும் கிறுக்கா?

இதயம் இருப்பது மனிதரின் பிழையா?
இல்லை என்பதே இருப்பவர் தொழிலா?
வாழ்க்கை என்பது அனுபவச் சிறையா?
வாழ்வது என்பதே சாகசக் கலையா?
நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்...


***


English Translation:

Why opposite results?
(Dedicated to Mahakavai Subramanya Bharathy)

The robbers looking like the philanthropist
The temple demolishers looking like the God
The betrayers looking like the fighters
The pimps looking like the volunteers
The non-Tamilians looking like the Tamils
The selfish mongers looking like the leaders

The childless looking like the fathers
The perplexed looking like the geniuses
The mindless fools looking like the experts
The no prowess looking like the poets
The murderers looking like the artists
Those who run domestic life looking like the ascetics

The sex maniacs looking like the priests
The meanies looking like righteous
The offenders looking like the judges
The righteous looking like the convicts
The immigrants looking like the kings
The great lineage looking like the refugees

The selfish naives running the government
The kin and kith becoming the ministers
Those in power drowning in intoxication
Even the cowards 'winning' the elections
That who take bribes getting unperturbed
The cunning ones fondling and enjoying

Calling the Bharath as the sandals ruled
Telling that I would serve as the slippers
Buying the 'Vote' and declaring as the winnings
Saying 'Heirs' are the democracy
Declaring 'The Big King' for the boot-lickers
Insisting 'Prizes' for the self too

Wishing the 'Nobel' (/No-teeth) and smiling sheepishly
Wanting the 'Sahithyam' (/Death) and talking indirectly
Making the profit to the extent possible
Planning cunningly and stealing to save
Though nothing is the real stuff
Promising that as the great accomplishments

Though they in crossroads met with the death
Pretending and ending though high dramas
Singing the tunes in the available gaps
Then shedding the crocodile tears
Looting the tri-Tamil properties

Forcing the useless schemes and plans
Mortgaging only at the World Bank
Making the life only through corruption
Cooking by plundering through places
Terming the power chance as 'the God ruled'
Playing through the haughtiness

Dividing to share the afflicted people
Contacted all seeking self gain
Diverting the attention if at all awakened
Growing stupidity to those show bravery
Justifying the drama that continuing
Saying all well as what happened

Chaste ladies turning as whores
Nobles losing all their rights
Telling ill as the just for all the ills
Saying terrorism as the solution for itself
Ridiculing the father of the nation
Handing over the nation to the 'Actor's

Staying jobless in the streets
Calling as fate and falling in distress
Boozing with the liquors to doze & lose dignity
Growing the 'Religion /rut' and spoiling the humanity
Is it the revenge of previous deeds?
Is it the ignorance of the laymen?

If the sky and earth is certain
If the growing moon and sun is promise
Will the virtues ignore political mistakes?
Will the accumulated sins destroy by themselves?
Prior and later deeds are they true?
Are the old sayings just the lies?


Will the lies and twists ever go heights?
Will stealing the properties fetch ever the fame?
Will the kindness come for always crying?
Will sympathy alone make up the life?
Will living by deceits be the life?
Will withering and suffering remove the agony?

Will hearty depression give away the discretion?
Will the wearing memory remove the worries?
Will the fun watching fill the stomach?
Will all the distress change by themselves?
Will there be victory without any effort?
Will the lame sleep ever touch the eminence?

Will the lineage come automatically?
Will the perturbation leave by discomfort?
Will it be natural to stay inactive?
Will the dying alone mean the patience?
Will the irreparable mind ends the responsibility?
Will the despising the God attain the wishes?

Is that clear affair to fostering the evil?
Is that Gods grace the endless agony?
Is that natural law the opposite results?
Is that Gods deceit the day and night?
Is that the Truth the language of dumb?
Is that sensible to miss any opportunity?

Is the death of starving for the toiled?
Is the life at forts for the looting folks?
Is the fort the room for the plunderer?
Is that the office for the robbing front?
Is cleanliness a gone away stock?
Is misery the continuing madness of blocks?

Is the heart the mistake of humanity?
Is the empty hand the duty of riches?
Is the life the prison for experiences?
Is the living itself an extraordinary art?
The heart is unable to bear on these…
Unstable human beings ever could think of…

***

12 comments:

  1. நாட்டாமைDecember 11, 2009 at 10:17 PM

    இன்றைய தமிழ்நாட்டின் நிலையை இதற்கு மேல் தெளிவாக விளக்கமுடியாது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இன்றைய அரசியலும் நாட்டின் நிலையும் கவிதை முழுவது அப்படியே வியாபித்திருக்கிறது. இந்த கவிதையை மட்டும் யாராவது என்னிடம் காட்டி "இது யார் எழுதியது என்று கண்டுபிடிக்கச்சொன்னால்?" நிச்சயம் நான் பாரதி என்றே சொல்லியிருப்பேன். அந்த அளவுக்கு ரொம்ப அற்புதமாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தங்களின் வருகைக்கும், பதிவிற்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் நண்பர் நாட்டமை மற்றும் நிலோஃபர் அன்பரசு அவர்களே.

    பாரதி மகாகவி. அவரின் ஆளுகையில் நான் ஒரு சிறு துளி. அவ்வளவே. பாரதியையும், கண்ணதாசனையும் நான் அதிகம் ரசிக்கிறேன். எனவே அவர்கள் என்னில் பிரதிபலிக்கலாமென நினைக்கிறேன். நன்றி.

    நண்பர்களே மீண்டும் ஒரு கவிதையில் சந்திப்போம்.

    ReplyDelete
  5. நாட்டில் நடக்கின்ற நாடகத்தை நயமாகவும் நன்றாகவும் கவிதையில் உரைத்தீர். எழுதிய எண்ணங்களுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அருண். மீண்டும் வருக.

    ReplyDelete
  7. உத்தமபுத்ரா!

    வாழ்த்துக்கள் நண்பா, கவிதைகளில் நல்ல வீச்சம், சொல்லாடல் இருக்கிறது!... நிறைய எழுதுங்கள். தொடர்கிறேன், நண்பர்களுக்கும் சொல்கிறேன்...

    Word Verification எடுத்துவிடுங்கள். பின்னூட்டமிட சிரமமாயிருக்கிறது!

    பிரபாகர்.

    ReplyDelete
  8. தங்களின் வருகைக்கும், பதிவிற்கும் முக்கியமாக settings செய்யவேண்டிய மாற்றத்தை எடுத்துக் கூறியதற்கும் நன்றிகள் நண்பர் பிரபாகர் அவர்களே.

    தாங்கள் பரிந்துரைத்தபடி இப்போது Word Verification ஐ எடுத்து விட்டேன். உங்களால் புதியதையும் கற்றேன். அதற்காக மிக்க நன்றி.

    நேரம் கிட்டுகையில் நிச்சயம் புதியவற்றை முயற்சிக்கிறேன். தொடரும் உங்களைப் போன்றோரின் பதிவுகள் நிச்சயம் ஊக்கம் தருகின்றன.

    ReplyDelete
  9. "தமிழே அல்லாதோர் தமிழர் போலவும்"
    தற்சமய தமிழ்நாடு இப்படிதான் உள்ளது,
    தமிழில் பேசுவதே அவமானமாக கருதும் நம் சில தமிழர்களால் விதைத்த விதைகள்,
    தமிழே அல்லாதோர் தமிழர் நம் தமிழையாவது காப்பற்றுகிறார்களே!

    ReplyDelete