Tuesday, December 29, 2009

பொருட் சுவை

பொருட் சுவை


உன்னவை என்னவை இல்லை என்றேன்
நிம்மதி வந்தது

என்னவை உன்னவை இல்லை என்றேன்
பகை வந்தது

என்னவை என்னதே என்றேன்
தனிமை வந்தது

என்னவை உன்னவை என்றேன்
பாசம் வந்தது

எல்லாம் உம்மவை என்றேன்
பரிசு வந்தது

உன்னவை உன்னவையே என்றேன்
மதிப்பு வந்தது

நம்மவை நம்மவையே என்றேன்
ஒற்றுமை வந்தது

எல்லாம் பொதுமை என்றேன்
பெருமை வந்தது

உன்னவை என்னவை என்றேன்
உரசல் வந்தது

எல்லாம் நம்மவையே என்றேன்
போர் வந்தது

எல்லாம் எனக்கே என்றேன்
துன்பம் வந்தது

எல்லாம் ஏதுக்கு என்றேன்
இன்பம் வந்தது

எல்லாம் இனிமையே என்றேன்
இனிமையே வந்தது

மனது இதுவும் நிரந்தரமல்ல என்றது
ஒழுக்கம் வந்தது

உள்ளத்து உள்ளே உற்றுப் பார்த்தேன்
தியானம் வந்தது

உடலும் உனதல்ல உலகும் உனதல்ல
ஒளி வந்தது

எதுவுமே உனதல்ல யாதுமே நமதல்ல
மோனம் வந்தது

இருத்தலும் வேண்டாம் இரத்தலும் வேண்டாம்
ஞானம் வந்தது

இறத்தல் மட்டும் வந்தால் போதும்
பேரின்பம் என்றது

***

6 comments:

  1. ரொம்ப நல்லா இருக்குங்க...
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களிற்கும் நன்றி கமலேஷ்.

    ReplyDelete
  3. very new and good try

    ReplyDelete
  4. தலைப்பில் பொருளை நீக்கினேன்
    இறுதிவரியில் பேரின்பச்சுவை வந்தது!
    அழகான கோர்வை!

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் Magnanitha

    ReplyDelete