Friday, April 2, 2010

நெருப்பு

நெருப்பு


நேரில் மோதினால்
நீரிலே அழியும்
நெருப்பு
சினந்து, தகித்து, தணலாய்,
வெட்கையாய், வெயிலாய்ச்
சூடு படுத்தி
நிழல் யுத்தத்தால் மட்டுமே
கொதிக்கவும், ஆவியாக்கவும்,
அழிக்கவும் முடிகிறது
நீரை.

***

2 comments:

  1. நீரிலே அழிந்தாலும்
    நீரை ஆவியாக்கி மகிழும்

    தணலாக தகித்து
    தனித்தே ஒளிரும்

    வெயிலாய் தகித்து
    வெண்மேக பிரசவம்
    ------------------------------------------
    சினத்தை உமிழ்ந்து
    சிந்தையை அழிக்கும்

    வேட்கையின் வேகம்
    வெட்கத்தை புதைக்கும்

    ReplyDelete