ஹைக்கூ கவிதைகள் |
|
மேகம். உருகாமலும் கரையாமலும் மிதக்குதே வெயிலில் ! ”மேகம்” தென்றல் காற்றுக்கு மாத்திரம் கரைந்து உருகும் பஞ்சுப் பொதி மேகம்! மழை. யாரைக் தாக்க சரம் சரமாய் அம்புகள் ? "மழை" பனிக்கட்டி. (ஐஸ் கட்டி) என்ன ஆச்சரியம்! கெட்டிப்பட்ட படிகத் தண்ணித் துண்டு நீரிலேயே மிதக்குதே பனிக்கட்டி! நெருப்பு. நேரில் மோதினால் நீரிலே அழியும் "நெருப்பு" வானவில். இயற்கை எங்கோ ஓவியம் தீட்டத் தொட்டுக் கொள்ளும் வண்ணக் கலவைப் பேழை "வானவில்" மின்னல். வானம் சொன்னது: மழை என்ன அழுகையா? ஸ்மைல் ப்ளீஸ்...சீஸ்... இடி. அடை மழையிலும் விடாது வெடிக்கும் பட்டாசு "இடி" பூ. மொட்டாகி, மலராகி அடச்சே ... வாடி உதிர்ந்துபோகும் வாழ்க்கைதானா? "பூ" உலகம். உருண்டு கொண்டே இருக்கிறது விடியலைத் தேடி உலகம்! உருண்டு கொண்டே இருக்கிறது வெயிலை, வெப்பத்தை, வெளிச்சத்தைத் தேடி "உலகம்" மனிதா. உன்னை வலைக்குள் சிறை செய்யப் போதும் ஒரு கொசு! காற்று. குழல் இசையைக் கடத்திவிட்டு அடுத்தொரு மூச்சாய் காற்று! சாலை. உன்னையும் என்னையும் இணைக்கும் கம்பியாய் தரையில் சாலை! வாயிற் பாய்: (Door mat) எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் வரவேற்பில் மிதிவாங்குவது என்னவோ வாயிற் பாய்தான்! சேமிப்பு: எறும்பும், தேனியும் மாத்திரமே சேமிக்கின்றன. வாழ்வில் நம்பிக்கை அதிகமோ விலங்குகளுக்கு? |
|
*** |
Friday, April 2, 2010
ஹைக்கூ கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
ஹைக்கூ ஓவ்வொன்றும் அருமை.
ReplyDeleteரொம்பவும் ரசிக்கும்படி இருக்கிறது.
படிக்கும் போது, பார்த்திபன் கனவு படத்தில் வரும் ஆலங்குயில் பாடலும் நினைவுக்கு வந்தது.
@Nilofer Anabarasu.
ReplyDeleteவருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றிகள் நண்பரே. மீண்டும் வருக.
மூன்று வரிகளாக மாற்றி பதிவிடுங்கள். ஹைக்கூ படிக்க எளிதாக இருக்கும்.
ReplyDeleteதென்றல் காற்றுக்கு மாத்திரம் கரைந்து உருகும் பஞ்சுப் பொதி - மேகம்
ReplyDeleteமேகம் காதலின் தூதுவன் அல்லவா?
தென்றலுக்கு மட்டுமே தலைவணங்கும்!
அருமையான ஹைகூ!!!!!!!ஹைகூவின் முகவரியை தெரிவித்ததற்கு நன்றிகள் பல.
@பின்னோக்கி.
ReplyDeleteஉங்களின் கருத்திற்கும் தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி.
இப்போது வரிகளை முடிந்தவரை மாற்றி அமைத்துள்ளேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
@V. Rajalakshmi
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
ஹைகூவின் முகவரியா? அறியேன்.
எல்லா ஃபார்மேட்டிலும் விளையாடிப் பார்ப்போமே எனும் முயற்சிதான்.
பல காலங்கள் ஆயினும் இந்த ஹைகூ பற்றி புரியாமலே கிறுக்கும் வழக்கம்..
ReplyDeleteவிளையாட்டே இப்படி என்றால்??????????????????
முகவரியே! முகவரி தேடும் முயற்சி!!!!!!!!!!!!!
இதுதான் உங்களை போன்றோர் வெற்றியின் ரகசியம் [கண்டுபிடித்து விட்டேனே! ரகசியத்தை ஹையா]
hi nanba pinnitinga ponga.....kalakkal kavithaigal....i also want to post my writings like this...guide me on this plz....
ReplyDelete-- Balakrishnan