Saturday, April 17, 2010

ஆருயிரே... ஆருயிரே...

ஆருயிரே... ஆருயிரே...


ஆருயிரே... ஆருயிரே... ஆருயிரே... ஆருயிரே...

ஆருயிரே நீ அழகு நிலாவென
     பாடிய பாவலன் தெருவினிலே
தேடுகிறேன் உனைத் தினந்தோறும்
     தென்றலே எங்கு நீ சென்றாயோ?
                                             (ஆருயிரே... ஆருயிரே...)

ஓடையிலோர் நாள்நீ நீராடும் கோலம்
     ஓடையிலே நான் பாடிய கீதம்
ஜாடையிலே அவை சகலமும் பேசி
     ஜனித்ததங்கே நம் காதலின் தீபம்
ஏனிந்தக் கோபம் நான்வரும் நேரம்
     உன்வாடைக் காற்றும் நெடுந்தூரம் போகும்...
                                             (ஆருயிரே... ஆருயிரே...)

கார்கால மேகம் எழுதாத விளக்கம்
     கண்ணீரில் நீதரும் இணையாத நெருக்கம்
போறாத காலம் புதியதோர் வானம்
     என்குரல் கேட்க அலையுது நாளும்
வாழ்வோம் சகியே வழிகளை வகுப்போம்
     வாசலின் ஓரமுன் பூமுகங் காட்டு
                                             (ஆருயிரே... ஆருயிரே...)

ஆருயிரே நீ அழகு நிலாவென
     பாடிய பாவலன் தெருவினிலே
தேடுகிறேன் உனைத் தினந்தோறும்
     தென்றலே எங்கு நீ சென்றாயோ?

***

1 comment:

  1. கார்காலமேகம் மழை தந்து தீரும்
    கண்ணீரில் நீதரும் தீராத சோகம்
    புரியாத நாதம் புதியதோர் வானம்
    உன் குரல் கேட்டு மௌனமாய் பாடும்

    ReplyDelete