Monday, February 27, 2012

ஜெர்மானிய லீப்ஸ்டர் ப்ளாக் விருது (LIEBSTER BLOG AWARD)

HTML clipboard
ஜெர்மானிய லீப்ஸ்டர் ப்ளாக் விருது 
(LIEBSTER BLOG AWARD)



 

மூலம் எங்கிருந்தோ ஆரம்பிக்கப்பட்டு, இளம் வலைப் பதிவர்களுக்கு வழங்கப்படும் ‘லீப்ஸ்டர்’ எனப்படும் இந்த ஜெர்மானிய விருதினைப் பெற்ற சக பதிவுலகத் தோழி அகிலா (சின்ன சின்ன சிதறல்கள்: http://vannathuli.blogspot.in) அவர்கள், அதனை மேலும் ஐவருக்குப் பரிசளித்துச் சிறப்பித்திருக்கிறார்கள். அதில் நமது ‘தமிழ்க் கவிதைகள்’ பக்கமும் ஒன்று என்பதில் மிக்க மகிழ்ச்சி. எனவே தோழி அகிலா அவர்களுக்கு முதற்கண் பரிசில் பெற்றமைக்குப் பாராட்டுக்களும் அதனை நமக்குப் பகிர்ந்தளித்தமைக்கு நன்றிகளும் உரித்தாகுக.

இந்த விருதினை மேலும் ஐவருக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்குக் குறைவாக உள்ள வலைப்பூக்களுக்கு வழங்க வேண்டுமென்பது விருதின் விதி. ஆதலின் அதன் படியேயும், நமக்குக் கிட்டிய சுழல் பரிசினைப் பிறரோடு பகிர்வதில் உண்மையிலேயே மகிழ்ச்சி கொண்டும், கீழ்க்கண்ட வலைப்பதிவு நண்பர்களுக்கு வழங்கி மகிழ்கின்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் இவ் விருதின் விதிக்கு ஏற்ப மேலும் ஐந்து இளம் பதிவர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

விருதினைப் பெறும் நண்பர்கள் மற்றும் அவர்களின் வலைப்பக்கங்கள்:

ஜீவி அவர்களின்: பூ வனம்
http://jeeveesblog.blogspot.in

சந்துரு அவர்களின்: சந்துருவின் வலைப்பூ
http://chandroosblog.blogspot.in

raajalakshmi அவர்களின்: ரசனைகள் பலவிதம்
http://see-think-write.blogspot.in

dinesh ram அவர்களின்: இது தமிழ்
http://www.ithutamil.com/

கரூர் கிறுக்கன் அவர்களின்: 
கரூர் கிறுக்கன் 
http://karurkirukkan.blogspot.in/

நன்றி.

- உத்தமபுத்திரா.

***

13 comments:

  1. அன்புள்ள உத்தமபுத்திரா,

    இந்த விருதை எனக்கு வழங்கிய தங்கள் அன்பு உள்ளத்திற்கும், ரசனைக்கும் மிக்க நன்றி. தங்கள் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    மிக்க அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
    Replies
    1. @ஜீவி

      தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நண்பரே. நிச்சயம் உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பெரிதும் வரவேற்கிறேன்.

      அன்புடன்

      உத்தமபுத்திரா

      Delete
  2. உழைப்புக்கு கிடைத்த மரியாதையாக இதை நினைக்கிறன் ,நண்பா மிக்க நன்றி

    ReplyDelete
  3. தங்கள் கவிதையின் ரசிகன் என்பதை தெரிவித்துக் கொள்ள பெருமைப்படுகிறேன்.தங்கள் மூலம் லீப்ஸ்டர் விருது பெறுவது எனக்கு பெருமையாக இருக்கிறது.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சந்துரு அவர்களே. நானும் உங்களது நடையின் ரசிகன்; அதிலும் விஞ்ஞானத்தைத் தமிழில் மிக எளிதாக, மெல்லிய நகைச்சுவையோடு சொல்லும் அழகிற்கு இன்னொரு ஷொட்டு. எனவே தாங்கள் இன்னும் பல சிறப்புக்களை அடையவேண்டும் என்பதே எனது ஆவல்.

      இடையில் ஒரு கருவியாய், பாலமாய் இவ் விருதினைத் தங்களிடம் சேர்க்க அமைந்ததற்கு எல்லாம் வல்ல இறையருளை வணங்குகின்றேன்.

      தங்களின் பால்விதி பற்றி மட்டும் சிறிது மாற்றுக் கருத்துள்ளது; அதைப் பிறகு உங்கள் வலைத்தளத்தில் தெரிவிக்கின்றேன். நேரமின்மையே அனைத்துத் தாமதங்களுக்குக் காரணம். பொறுத்துக் கொள்ளவும். விரைவில் வருகிறேன்.

      Delete
  4. வணக்கம் உத்தமபுத்திரரே!
    மிக்க நன்றி லீப்ஸ்டர் அங்கீகார விருதினை பகிர்ந்து அளித்ததற்கு, உண்மையில் இனிய அதிர்ச்சி மிக்க நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ராஜலக்‌ஷ்மி,

      மகிழ்ச்சி. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_19.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் திண்டுக்கல் தனபாலன் அவர்களே...

      மேற்படி செய்திக்கும் அதன் மூலம் கிட்டிய வலைச்சரம் எனும் அருமையான பக்கத்திற்கும்...

      Delete