Monday, February 14, 2011

வாழ்க்கை ஏதுக்கடா?

வாழ்க்கை ஏதுக்கடா?

1

நல்லதை நினைக்காமல் - உனக்கு
      நாசமும் ஏதுக்கடா? - மனிதா
அல்லதை மறுக்காமல் - உனக்கு
      ஆசையும் ஏதுக்கடா?

2 அன்பினை வழங்காமல் - உனக்கு
     அண்டமும் ஏதுக்கடா? - மனிதா
அறத்தினை ஒழுகாமல் - உனக்கு
     ஆக்கங்கள் ஏதுக்கடா?

3 பண்பினை வளர்க்காமல் - உனக்கு
     பாசங்கள் ஏதுக்கடா? - மனிதா
பகைமை களையாமல் - உனக்கு
     படிப்பினை ஏதுக்கடா?

4 நேர்மை நில்லாமல் - உனக்கு
     நெஞ்சம் ஏதுக்கடா? - மனிதா
கூர்மை இல்லாமல் - உனக்கு
     குழப்பம் ஏதுக்கடா?

5 தாய்மை போற்றாமல் - உனக்கு
     தாயகம் ஏதுக்கடா? - மனிதா
வாய்மை காக்காமல் - உனக்கு
     வாய்ப்பும் ஏதுக்கடா?

6 பாதியில் பெண்ணின்றேல் - உனக்கு
     பயணம் ஏதுக்கடா? - மனிதா
நீதியில் கண்ணின்றேல் - உனக்கு
     ஞானம் ஏதுக்கடா?

7 களவுகள் எளிதாயின் - உனக்கு
      காவலன் ஏதுக்கடா? - மனிதா
இலவசம் வலிதாயின் - உனக்கு
      யாதுமே ஏதுக்கடா?

8 கடமையும் இலதாயின் - உனக்கு
      கவலை ஏதுக்கடா? - மனிதா
குடிசையும் இலதாயின் - உனக்கு
      குடும்பம் ஏதுக்கடா?

9 சாதிகள் ஏதுக்கடா? - உனக்கு
      சண்டைகள் ஏதுக்கடா? - மனிதா
சமரசம் காணாமல் - உனக்கு
      சமயங்கள் ஏதுக்கடா?

10 பேதங்கள் ஏதுக்கடா? - உனக்கு
      பேதமை ஏதுக்கடா? - மனிதா
வாதங்கள் ஏதுக்கடா? - உனக்கு
      வன்மங்கள் ஏதுக்கடா?

11 மோதல்கள் ஏதுக்கடா? - உனக்கு
      மோகங்கள் ஏதுக்கடா? - மனிதா
காதலே இல்லாமல் - உனக்கு
      காமம் ஏதுக்கடா?

12 சோதனை செய்யாமல் - உனக்கு
      சோகங்கள் ஏதுக்கடா? - மனிதா
சாதனை இல்லாமல் - உனக்கு
      சரித்திரம் ஏதுக்கடா?

13 வல்லினம் ஏதுக்கடா? - உனக்கு
      மெல்லினம் ஏதுக்கடா? - மனிதா
இடையினம் நாடாமல் - உனக்கு
      இன்பம் ஏதுக்கடா?

14 வம்புகள் ஏதுக்கடா? - உனக்கு
      வன்முறை ஏதுக்கடா? - மனிதா
இன்பத்தை நாடாமல் - உனக்கு
      துன்பங்கள் ஏதுக்கடா?

15 மதவெறி ஏதுக்கடா? - உனக்கு
      மொழிவெறி ஏதுக்கடா? - மனிதா
இனவெறி ஏதுக்கடா? - உனக்கு
      பணவெறி ஏதுக்கடா?

16 ஆதியை அறியாமல் - உனக்கு
      ஆன்மா ஏதுக்கடா? - மனிதா
சோதியைக் காணாமல் - உனக்கு
      சுயமும் ஏதுக்கடா?

17 தேடலும் இல்லாமல் - உனக்கு
      தெய்வம் ஏதுக்கடா? - மனிதா
தேம்பலும் நில்லாமல் - உனக்கு
      தேசம் ஏதுக்கடா?

18 தீமைகள் விலகாமல் - உனக்கு
      தேர்ச்சியும் ஏதுக்கடா? - மனிதா
தீட்டுகள் அகலாமல் - உனக்கு
      தேசியம் ஏதுக்கடா?

19 பொருளே அறியாமல் - உனக்கு
      போதனை ஏதுக்கடா? - மனிதா
இருளே அகலமால் - உனக்கு
      இதயம் ஏதுக்கடா?

20 பொன்னகை ஏதுக்கடா? - உனக்கு
      பொய்மை ஏதுக்கடா? - மனிதா
புன்னகை புரியாமல் - உனக்கு
      புதுமையும் ஏதுக்கடா?

21 எளிமை கொள்ளாமல் - உனக்கு
      ஏளனம் ஏதுக்கடா? - மனிதா
ஏழ்மை கொல்லாமல் - உனக்கு
      ஏற்றம் ஏதுக்கடா?

22 அச்சம் ஏதுக்கடா? - உனக்கு
      ஆண்மை ஏதுக்கடா? - மனிதா
பிச்சைப் பொருளாலே - உனக்கு
      பிழைப்பும் ஏதுக்கடா?

23 உழைப்பே இல்லாமல் - உனக்கு
      உணவும் ஏதுக்கடா? - மனிதா
பிழைப்பே இல்லாமல் - உனக்கு
      பேச்சும் ஏதுக்கடா?

24 புனிதம் ஏதுக்கடா? - உனக்கு
      புத்தியும் ஏதுக்கடா? - மனிதா
மனிதம் மதிக்காமல் - உனக்கு
      மாண்பும் ஏதுக்கடா?

25 மயக்கம் ஏதுக்கடா? - உனக்கு
      மவுனம் ஏதுக்கடா? - மனிதா
தயக்கம் ஏதுக்கடா - உனக்கு
      தைரியம் ஏதுக்கடா?

26 உயிரினை மதிக்காமல் - உனக்கு
      உணர்வுகள் ஏதுக்கடா? - மனிதா
உரிமையை மதிக்காமல் - உனக்கு
      விடுதலை* ஏதுக்கடா?
* சுதந்திரம்

27 பெருமையை துதிக்காமல் - உனக்கு
      பிறப்பும் ஏதுக்கடா? - மனிதா
உறவினை மதிக்காமல் - உனக்கு
      சிறப்பும் ஏதுக்கடா?

28 பிரிவுகள் ஏதுக்கடா? - உனக்கு
      பிளவுகள் ஏதுக்கடா? - மனிதா
விருப்புகள் குறையாமல் - உனக்கு
      வெறுப்புகள் ஏதுக்கடா?

29 சிறகுகள் இல்லாமல் - உனக்கு
      சிறைகள் ஏதுக்கடா? - மனிதா
வரையறை இல்லாமல் - உனக்கு
      வேட்கை ஏதுக்கடா?

30 உதவிகள் செய்யாமல் - உனக்கு
      உடலும் ஏதுக்கடா? - மனிதா
உயர்வினை அடையாமல் - உனக்கு
      உளமும் ஏதுக்கடா?

31 சீர்மை படையாமல் - உனக்குச்
      சிந்தனை ஏதுக்கடா? - மனிதா
மூர்க்கம் உடையாமல் - உனக்கு
      வந்தனை ஏதுக்கடா?

32 மேன்மை அடையாமல் - உனக்கு
      மெத்தனம் ஏதுக்கடா? - மனிதா
மேதமை அடையாமல் - உனக்கு
      தத்துவம் ஏதுக்கடா?

33 கேண்மை பிடிக்காமல் - உனக்கு
     கேள்வி ஏதுக்கடா? - மனிதா
கீழ்மை தடுக்காமல் - உனக்கு
     கேளிக்கை ஏதுக்கடா?

34 ஆட்டம் ஏதுக்கடா? - உனக்கு
      அகந்தை ஏதுக்கடா? - மனிதா
பாட்டம் ஏதுக்கடா? - உனக்கு
      பற்றும் ஏதுக்கடா?

35 வாக்கே தெளியாமல் - உனக்கு
      வாட்டம் ஏதுக்கடா? - மனிதா
வஞ்சகம் ஒழியாமல் - உனக்கு
      ஓட்டும் ஏதுக்கடா?

36 ஆக்கம் புரியாமல் - உனக்கு
      ஆத்திரம் ஏதுக்கடா? - மனிதா
நோக்கே தெரியாமல் - உனக்கு
      வாழ்க்கை ஏதுக்கடா?

***

11 comments:

  1. மிக அருமையான கவிதை!
    இந்த வாழ்க்கை உனக்கு தேவையா? என
    சாட்டையால் [வார்த்தைகளால்] அடிக்கிறார் கவிஞ்சர்!
    மனிதா
    காதலே இல்லாமல் - உனக்கு
    காமம் ஏதுக்கடா? நல்ல கேள்வி!!!!!!!!!!!!!!!!!
    கன்னத்திலே ஒண்ணு போடு!

    ReplyDelete
  2. ///இந்த வாழ்க்கை உனக்கு தேவையா? என
    சாட்டையால் [வார்த்தைகளால்] அடிக்கிறார் கவிஞ்சர்

    இந்த வாழ்க்கையே உனக்குத் தேவையா என்று எதிர்மறையான பொருளுக்கு இட்டுச் சென்று விடாதீர்கள்.
    வாழ்வின் நோக்கமே தெரியாமல் உனக்கு வாழ்க்கை தேவையா என்கின்ற கேள்வியும் மற்றவையும் நேர்மறையான கேள்விகள்.
    விடைகளைத் தேடி வாழ்க்கையை அர்த்தப் படுத்திக் கொள் என்பது பொருள்!!!

    சரியான புரிதலில் குழுப்பம் வேண்டாம்.

    கவிஞ்சர்????

    ReplyDelete
  3. கவிஞர்,கவிஞர்,கவிஞர்,கவிஞர்,கவிஞர்,..........................போதுமா?

    இப்போ எல்லாம் தமிழ் நல்லா புரியுது...
    கவிதை படித்தவருக்கு குழப்பம் இல்லை.. பதித்தவருக்குதான் குழப்பம்..
    100/100 இல்லை என்றாலும்
    50/100 எடுக்கும் புரிதல் இருக்கு...
    அவ்வளவு புரியாமலும் படிக்கல...
    புரியாமலும் பின்னூட்டம் கொடுக்கல..
    ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

    ReplyDelete
  4. ///பதித்தவருக்குதான் குழப்பம்..

    குற்றச்சாட்டை விளக்கினால் நலம்.

    ReplyDelete
  5. Naan onnum kutram sollala..."Purithalil kuzhappam vendaam" ena sollave enakku kuzhappam illai padhiththavarukkuthaan kuzhppam ena sollitten mannikkavum..theriyamal sollitten!
    Unmaiyile naan kavidhaiyai purinthuthaan padiththen 3 ,4 murai padiththen adhu vera visayam... menmai adaiyaathey unakku enabdhu pola 'they' ena sollave puriyala konja neram...

    [Menmai aadaiyaatha unakku ena irukkumo endru santhegam appuram purinthathau adhu Tamizh ilakkana ,ilakkiyaththil appadi irukkum ena ]

    ReplyDelete
  6. மிக்க நன்றிகள் தோழி. உங்களின் பார்வை அசாத்தியம். நானும் கருத்தின் போக்கில், பேச்சு வழக்கை வைத்து அவ்விதம் அமைத்து விட்டேன். இப்போது சரி செய்து கொஞ்சம் விரிவும் செய்துள்ளேன். மீண்டும் உங்கள் கருத்தைத் தருவீர்களென நம்புகின்றேன்.

    ஏற்பட்ட தவறுக்கு மன்னிக்கவும். நன்றி.

    ReplyDelete
  7. Haiyaa haiya haiya.... naan ninaithathu sari..lalala....appo "they" ena solvathu ilakka ilaakkiya Tamizh illaiyaa? Nanbarey ungalidam miga thaazhmaiyudan kettu kolgiren mannikkavum endru sollathinga.. [pidikkala] nandri mattum podhum...hhhmm romba arumaiyaa irukku amudha surabi pola neenga "Arivin Surabi" ennama varudhu kavidhaigal...

    ReplyDelete
  8. பதிலிற்கு நன்றிகள் தோழி.

    து என்னும் உகார இறுதியை ஏகாரமாக மாற்றும் போது சில நேரங்களில் ஆச்சரியத் தொனியில் இருப்பினும், பல சமயங்களில் ஏவல் பொருளாக ஆகிவிடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம் ஆகிறது.

    இங்கு தவறாகத் தெரிவது பேச்சு வழக்கில் அதன் தொனியால் மறைந்துவிடும். ஆனால் எழுத்தில் அவை படிப்பவரைப் பொறுத்து பொருள் மாற சாத்தியங்கள் அதிகம். ஆதலால் குழப்பம் தரும் உபயோகம் தவறே. தவறினைச் சுட்டியமைக்கு மீண்டும் நன்றி.

    அமுதசுரபி என்னும் உங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Once again i am saying Manimegalan!
    நோக்கே தெரியாமல் - உனக்கு
    வாழ்க்கை ஏதுக்கடா?
    Arumai!Idhai vidhi ena solbavargalum irukaanga enna solla????

    ReplyDelete
  11. No thanks friend. I prefer to be without any title simply as UthamaPuthra Purushotham.

    But thanks for your appreciation.

    ReplyDelete