Showing posts with label இராமயணம். Show all posts
Showing posts with label இராமயணம். Show all posts

Tuesday, March 30, 2010

காதலா? காமமா?

காதலா? காமமா?


அண்ணலும் நோக்கி
அவளும் நோக்கி
மலர்ந்தது
காதலா? காமமா?
காமமே...
ஆம்... அன்றில்
காதலில் எப்படி
அக்னிப் பரீட்சை?

பிறருக்குக் காட்டுவதா
காதல்?

சந்தேகப் பட்டவள்
தீயில் உயிர்த்தெழுந்தாள்
சந்தேகப் பட்டவன்
மூழ்கிய நீரில்
செத்தே போனான்.

நம்பாத காதல்
இராமயணம்...

விதியின் முன்னால்
காதலுமில்லை
காமமுமில்லை
இராமனுமில்லை
இராவணனுமில்லை...

***