Tuesday, March 30, 2010

காதலா? காமமா?

காதலா? காமமா?


அண்ணலும் நோக்கி
அவளும் நோக்கி
மலர்ந்தது
காதலா? காமமா?
காமமே...
ஆம்... அன்றில்
காதலில் எப்படி
அக்னிப் பரீட்சை?

பிறருக்குக் காட்டுவதா
காதல்?

சந்தேகப் பட்டவள்
தீயில் உயிர்த்தெழுந்தாள்
சந்தேகப் பட்டவன்
மூழ்கிய நீரில்
செத்தே போனான்.

நம்பாத காதல்
இராமயணம்...

விதியின் முன்னால்
காதலுமில்லை
காமமுமில்லை
இராமனுமில்லை
இராவணனுமில்லை...

***

2 comments:

  1. நோக்கிய நோக்கலில்
    நெருங்கிய இதயம்
    தேங்கிய காதலில்
    திகட்டிய காமம்

    ReplyDelete
  2. நம்பாத காதல்
    இராமாயணம் ...

    நம்பிய காதல்
    உன்னத மனம்

    வழி வழியா வகுத்தால்
    விதி என பெயரா?

    ReplyDelete