Monday, March 29, 2010

நித்தியானந்தா...

நித்தியானந்தா...


இனி ஒரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனி ஒரு மனிதனுக்குக்
காயடித்த பின்னரே - இனிக்
காவி அணிவிப்போம்...

தனியொரு மனிதனின் லீலையைப்
படம் பிடித்து
வினியோகிப்பவனைத்
தரணியில் துரோகி என்போம்...

காமத்தை உணராத் துறவி
முற்றும் அறிந்தவனும் இல்லை
முற்றும் துறக்காத துறவி
பரமஹம்சன் என்பதும் இல்லை

காமம் செய்யும் குரு என்பவன்
கெட்டவனுமில்லை...
தொலைக் காட்சியில்
ஒளிபரப்புவோன்
புனிதனுமில்லை...

ஊரான் சொத்து 90 ஏக்கரை
தன் குடும்பம் என்ற கலைக்
குடும்பத்திற்குக் கொள்ளை அடித்ததை
கவனச் சிதறல் செய்ய
அஜீத் டயலாக் எபிசோட்...

மாணவர்கள் கொலை,
ஸ்டாலின் புத்தக சுயபாராட்டு
கவனச் சிதறலுக்கு
பேரம் படியாத
நித்தியானந்தா - ரஞ்சிதா
பழைய வீடியோ
ஒளிபரப்பு...

வாழ்க தமிழகம்!

நித்தியானந்தா
தற்கொலை வேண்டாம்..
துறவைத் துறந்து
ரஞ்சித்தாவை
அவர் விவகாரத்துப்
பெற்றபிறகு
முறைப்படி
மணந்து இன்புறுவாயாக...

பிறக்கும் குழந்தைக்கு
பரமானந்தன்
எனப் பெயர் சூடுக...
யார் யாரோ வாழ்கிறார்கள்
அட
நீங்களும்தான் வாழ்ந்துவிட்டுப்
போங்களேன்...

நடந்த அவமானமே
உங்களுக்குப்
போதிய தண்டனை!

***

4 comments:

  1. //காமம் செய்யும் குரு என்பவன்
    கெட்டவனுமில்லை...
    தொலைக் காட்சியில்
    ஒளிபரப்புவோன்
    புனிதனுமில்லை...//
    அதை பற்றி பேசும் மக்கள்
    புத்தனுமில்லை.

    ReplyDelete
  2. மக்கள் எப்போதுமே புத்தர்கள் அல்ல... பாவம் வெறும் மாக்களே...

    ReplyDelete
  3. ur.. words profess u have more philosophy.
    but why u denote ....maakkal. are we one of the society member?
    we should provide awareness...

    ReplyDelete
  4. Hi Suguna,

    Welcome to the post and thanks to your comments. Oh, I tried. You know what they tried to term me as the Swami UthamaPuthraji... :).

    But I promise I will try my best to make things clearer...

    ReplyDelete