Monday, March 29, 2010

ஊடலா...கூடலா...

ஊடலா...கூடலா...

(ஒரு காதல் பாடல்)


ஆண்: அன்பெனும் மொழி காட்டி
               ஆசையில் விழி காட்டி
          இன்பத்தை எனக்[கு ஊ] கூட்டவா... - கண்ணே
               ஈகையை எனக்[கு ஊ] கூட்டவா...

பெண்: அன்பெனும் மொழி கூட்டி
               ஆசையில் விழி கூட்டி
          இன்பத்தை எனக்[கு ஊ] கூட்டவா... - கண்ணா
               ஈகையை [கு ஊ] கூட்டவா...

ஆண்: உண்மையின் முகம் காட்டி
               ஊமையின் அகம் காட்டி
          எண்ணத்தில் பொருள் கூட்டவா... - கண்ணே
               ஏழைக்கு அருள் காட்டவா...

பெண்: உண்மையின் முகம் காட்டி
               ஊமையின் அகம் காட்டி
          எண்ணத்தில் நிறை காட்டவா... - கண்ணா
               ஏழைக்கு அருள் காட்டவா...

ஆண்: ஐயத்தின் மருள் நீக்கி
               அகிலத்தின் இருள் நீக்கி
          ஒளிதரும் நிலவாகி வா... - கண்ணே
               ஓவியக் கலையாகி வா...

பெண்: ஐயத்தின் மருள் நீக்கி
               அன்னையின் பசி போக்கி
          ஒய்யார அழகோடு வா... - கண்ணா
               ஓயாத எழிலோடு வா...

ஆண்: கன்னத்தில் நிறங் கூட்டி
               காவியத் திறங் காட்டி
          சந்தனத்* தமிழேநீ வா... - கண்ணே
               சாதனைக் கவியொன்று தா...
*சந்தத்துத்

பெண்: சிந்தனைக் கரு வாகி
               சேயெனும் உயிர் ஆகி
          செங்கதிர் ஒளியாகி வா... - கண்ணா
               செந்தமிழ் மதியாக வா...(?)...

ஆண்: பண்ணெனும் இசை யாகி
               பாவனை மழை ஆகி
          மெல்லெனும் சிறகாக வா... கண்ணே
               மேனியில் உறவாட வா ...(?)...

பெண்: நெஞ்சினில் சுவை நாடி
               நேர்மையைக் கவி பாடி
          மஞ்சத்தில் விளையாட வா... கண்ணா
               மனதினில் விளையாட வா...(?)...

இருவரும்: அன்பெனும் மொழி காட்டி
               ஆசையில் விழி காட்டி
          இன்பத்தை எனக்[கு ஊ] கூட்டவா... - கண்ணே
               ஈகையை எனக்[கு ஊ] கூட்டவா...

***

2 comments:

  1. அன்பெனும் மொழி கூட்டி
    ஆம்பல் மலர் விழி காட்டி
    என் தனிமை போக்கவா - கண்ணே
    தாய் தாலாட்டாய் பாட வா !

    உண்மையின் முகம் காட்டி
    எண்ணத்தில் மெருகூட்டி
    என் சிந்தையில் பதிய வா - கண்ணா
    இரு கைகோர்த்து சேர்ந்து வா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் Anonymous!

      Delete