2010 புத்தாண்டே வா...! |
|
புதிய ஆண்டே வா...! புதுமைகள் அனைத்தும் தா...! ஆலம் விருட்சமாய் அன்னைத் தமிழகம் திசைகளில் எல்லாம் கிளைகள் பரப்ப... கலைகள் வளர்ந்து கணினிகள் பெருகி முத்தமிழ் இன்னும் முன்னிலை செல்ல (புதிய) வாய்ப்புக்கள் குவிந்து வறுமைகள் அழிந்திட வல்லுனர் மிகுந்து வளம்பல கொளிக்க வள்ளுவம் வகுத்த நல்லறம் பேண சுற்றும் புறமும் சுகநலம் காண (புதிய) மக்களின் நெஞ்சில் மகிழ்வே பிறக்க மானில மானிடர் மானுடம் பெருக்க அறிவும் திறனும் அன்பும் பெருக வேற்றுமை நீங்க ஒற்றுமை ஓங்க (புதிய) சான்றோர் நிறைந்த சமுதாயம் சமைக்க வந்திடும் சந்ததி சிந்தையில் செறுக்க சாத்தியம் படைக்க சரித்திரம் உரைக்க மூத்த குடிமகன் முன்னிலும் சிறக்க (புதிய) உயர்ந்த உளமும் ஓங்கிய பார்வையும் தெளிந்த செயலும் நாமாய் இருக்க ஊனில் உணர்வில் தமிழே நிறைந்து உலகம் என்றும் நமதாய் இருக்க... (புதிய) |
|
*** |
Thursday, December 31, 2009
2010 புத்தாண்டே வா...!
Tuesday, December 29, 2009
பொருட் சுவை
பொருட் சுவை |
|
உன்னவை என்னவை இல்லை என்றேன் நிம்மதி வந்தது என்னவை உன்னவை இல்லை என்றேன் பகை வந்தது என்னவை என்னதே என்றேன் தனிமை வந்தது என்னவை உன்னவை என்றேன் பாசம் வந்தது எல்லாம் உம்மவை என்றேன் பரிசு வந்தது உன்னவை உன்னவையே என்றேன் மதிப்பு வந்தது நம்மவை நம்மவையே என்றேன் ஒற்றுமை வந்தது எல்லாம் பொதுமை என்றேன் பெருமை வந்தது உன்னவை என்னவை என்றேன் உரசல் வந்தது எல்லாம் நம்மவையே என்றேன் போர் வந்தது எல்லாம் எனக்கே என்றேன் துன்பம் வந்தது எல்லாம் ஏதுக்கு என்றேன் இன்பம் வந்தது எல்லாம் இனிமையே என்றேன் இனிமையே வந்தது மனது இதுவும் நிரந்தரமல்ல என்றது ஒழுக்கம் வந்தது உள்ளத்து உள்ளே உற்றுப் பார்த்தேன் தியானம் வந்தது உடலும் உனதல்ல உலகும் உனதல்ல ஒளி வந்தது எதுவுமே உனதல்ல யாதுமே நமதல்ல மோனம் வந்தது இருத்தலும் வேண்டாம் இரத்தலும் வேண்டாம் ஞானம் வந்தது இறத்தல் மட்டும் வந்தால் போதும் பேரின்பம் என்றது |
|
*** |
Monday, December 21, 2009
ஆசை
ஆசை |
|
வெயிலின் அருமை நிழலில் தெரியும் வீணரே ஏன் வாதம்? விதியின் வழிதான் பயணம் தொடரும் மனிதரே ஏன் கோபம்? அண்ணன் தம்பி அனைத்தும் வேடம் அளவு மீறிப் பழகாதே... அடிப்பார் நெஞ்சில் துடிப்பாய் நொடியில் அன்பு மனது கேளாதே... கொண்ட மனைவி கொடுத்த பிள்ளை கூட வருவோர் யாருமில்லை... பந்த பாசம் அறுத்து நின்றாலே பாவி மனதில் துயரமில்லை... (வெயிலின்...) கூட்டம் போடும் உறவுகள் எல்லாம் இருக்கிற வரைதான் சொந்தமடா... குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை கோபம் கொள்ளுதல் பாவமடா... இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது கண்களில் தெரிகிற மாயமடா... இரவும் பகலும் மாறும் என்பது இயற்கை தருகிற பாடமடா... (வெயிலின்...) சுவரே இல்லாச் சிறைதான் ’உலகம்’ சூட்சும உண்மை தெரிகிறதா? சுற்றம்; சூழல்; வாழும் காலம்; பெற்ற தண்டனை புரிகிறதா? போன வினைக்குக் கிடைக்கும் பலனை புரியாது இங்கே மயங்குகிறாய்... புதிய வினையால் தொடரும் விளைவைப் புரிந்து கொள்ளத் தயங்குகிறாய்... (வெயிலின்...) இருப்பினில் வந்ததும் எடுத்துச் செல்வதும் பாவ புண்ணியச் சுமைதானே... இன்பம் துன்பம் என்பது எல்லாம் வினையால் வருகிற நிலைதானே... பாழும் உலகில் மோகம் கொண்டு காதல்; ஆசை; வளர்க்காதே பழைய பாக்கியைத் தீர்க்கவே வந்தோம் புதிய பாவத்தைச் சேர்க்காதே... (வெயிலின்...) ஆசை என்பது ஆட்டம் தொடர ஆண்டவன் வைத்த தூண்டிலடா... அனுபவம் என்பது நிகழ்கிற வரையில் அடுத்தும் பிறவிகள் தோன்றுமடா... கொடுத்த வாழ்வை வாழ்ந்து முடித்தால் கடக்கும் தூரம் குறையுமடா... குறுக்கு வழியில் பறக்க நினைத்தால் மீண்டும் குருவி பிறக்குமடா... (வெயிலின்...) எதிரே வருகிற இன்னலைக் கண்டு அழுது துடிப்பது மடமையடா... எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்து முடிப்பது கடமையடா... இல்லை என்றே அறிந்த பிறகும் ஏங்கித் தவிப்பது துன்பமடா... இருப்பதைப் பகிர்ந்து அன்பினில் திளைத்தால் எல்லா நாளும் இன்பமடா... (வெயிலின்...) தேவையைச் சுருக்கி ஆசையை விடுத்தால் பின்வினைப் பாவம் ஓடுமடா... புலன்களை அடக்கி இறைவனைத் தொழுதால் புத்தியில் ஞானம் கூடுமடா... பெற்றதைக் கொண்டே வென்றிட வேண்டும் வாழ்வின் நோக்கம் முக்தியடா... பிறவிச் சுழற்சி மறுமை அறுத்தால் பெறுவோம் மோட்சச் சித்தியடா... (வெயிலின்...) |
|
*** |
Friday, December 11, 2009
எதிர்வினைப் பலன்கள் ஏன்?
எதிர்வினைப் பலன்கள் ஏன்? |
|
கொள்ளை அடிப்போர் வள்ளல்கள் போலவும் கோவிலை இடிப்போர் சாமியைப் போலவும் காட்டிக் கொடுப்போர் வீரர்கள் போலவும் கூட்டிக் கொடுப்போர் தொண்டர்கள் போலவும் தமிழே அல்லாதோர் தமிழர்கள் போலவும் தன்னலம் மிக்கோர் தலைவர்கள் போலவும் பிள்ளைகள் அற்றோர் தந்தைகள் போலவும் காமத் தேடிகள் அர்ச்சகர் போலவும் சுயநலப் பேதைகள் அரசினை ஆள்வதும் பாதணி ஆண்ட பாரதம் என்பதும் ’நோ-பல்’லைக் கோரிப் பல்லை இளிப்பதும் சந்தியில் நிற்போர் சாவினை ஏகினும் உதவா திட்டத்தை அமல் படுத்துவதும் துன்புறு மாந்தரைப் பங்கு வைப்பதும் பத்தினியர் எல்லாம் பரத்தையர் ஆவதும் வேலையும் அற்றுச் சாலையில் இருப்பதும் |
|
*** English Translation: Why opposite results? |