குலம்! | ||||||||||||||||||||
எனது சில எண்ணங்களைக் குறள்களாக, ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளின் நீட்சியாக ”குறள் ++” என்னும் அடைப்பின் கீழ் கொண்டுவர நினைக்கிறேன். இஃது கைப்பேசி2 என்பதும் போலும் இன்னொரு முயற்சி. உங்களின் கருத்துக்கள் எனது எண்ணங்களைச் செழுமைப் படுத்தலாம். பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
குறள் : | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
விளக்கவுரை: | ||||||||||||||||||||
1. பிறப்பொக்கும் இயற்கை பெறுங்குடிப் பேணுவதேன் பொருளுரை: குலப்பேதம் மறைந்து அழியக் குடிமக்கட்கு ஒரே வழி, அதனை அதன் அடிப்படை மூலத்திலேயே விலக்கி வைத்தலும் மேலும் முழுவதுமாக மறந்து விட்டு விடுதலும் தான். பொருளுரை: சமூதாயத்தின் சீர்கேடான, குடிமக்களின் இழுக்கான சாதிப் பிரிவு என்பது, சாதிக்கான ஒதுக்கல் எனும் சலுகைத் திட்டம் என்கின்ற பிடிப்பு மிக்க தொடர்ச்சி இருக்கும் வரையிலும் எவ்வாறு சாகும்? பொருளுரை: தகுதிகளை உடைய தக்கவரைச் சேரும் தலைமைகளால் நல்லது விளையும். தரப்படும் சலுகைகள் என்பவை பொருள் மிகுந்தவரைச் சாரின் அதனால் விளையும் அதன் உண்மைப் பயன் துயரமே. (மிடி = துன்பம்). இன்னொரு வகையில்; தகுதியுடைய தக்காரைச் சேரும் சலுகையால தலைமை நலம் தரும், அதுவே பொருள் மிக்காரைச் சாரின் துயரத்தையே தரும் எனவும் பொருள் கொள்ளலாம். (தரும் என்பதைத் நலம் தரும் எனவும்; தரும் சலுகை எனவும் பொதுவாக்கிக் கொள்ளலாம்.) | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
*** |
Thursday, October 28, 2010
குலம்!
Wednesday, October 27, 2010
கண்மணி அன்போடு...
கண்மணி அன்போடு... |
என் சிந்தனைக்குள் நீயும் இருப்பாய் நம்பிக்கையோடு! என் சிந்தனை முழுவதும் இருக்க வேண்டுமென எண்ணாதே.... அன்பே உலகில் உன்னைத்தவிர என்னையும் உன்னைப் போலவே பலர் நேசிக்கவும் நேசிக்கப் படவும் விரும்புகிறார்கள் பல மனிதர்களின் புரிதலுக்கு நான் வேண்டுமாம் சாதனைகள் செய்ய மனம் தேவை பயணம் செய்ய கவனம் தேவை கோளத்தின் அட்சய தீர்க்க ரேகைகளின் இடைவிட்ட சந்திப்புக் கணங்களில் மாத்திரம் நீயும் நானும் ஊடாடலாம்... நீ நீயாகவும் நான் நானாகவும் நாம் நாமாகவும் இவ் உலகில் பல சமயங்களில் செயல்பட ஏன் வாழவும் வேண்டியவர்கள் எப்போதும் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டும் ஆற்றும் பணியைப் பார்த்துப் பார்த்து பங்கெடுக்க அடம்பிடித்து அடிப்படை தெரியாமல் பலமுறை விழிப்பாய் ஏன் சொல்லிக் கொடுக்க மாட்டீர் என்று வம்பிழுத்து நான் கற்றுக் கொண்டால் வெற்றி பெற்றுவிடுவேன் என்றுதான் சொல்லித்தர மாட்டீர்கள் என்று கோபப்பட்டு... அழுது... சே சே... சரியான இம்சை நீ! என் சிந்தனையைச் சிதற வைத்து என்ன சுகம் காணுகின்றாய் என் இனியவளே? வளர்ந்தாலும் நீ இன்னும் சிறுபிள்ளை தான்... என்றால் நீங்களும் தான் என்பாய்!!! ஐயோ நான் என்ன செய்ய? |
|
*** |
Sunday, October 24, 2010
தமிழ் மொழி!
தமிழ் மொழி! |
எடுப்பு: |
தமிழே! தமிழே! தமிழே! - இந்தத் தரணியின் உயரிய தவத்திரு மொழியே! அருளே! தமிழே! அமுதே! - இந்த அவனியின் இருளறும் அருட்பெரு மொளியே! |
|
தொடுப்பு: |
தமிழே! தமிழே! தமிழே! - இந்த தரையினில் கடலெனத் தவழ்ந்திடும் எழிலே! வளமே! கதிரே! தமிழே! - இந்த வையகத் தொளிரும் வரம்பிலாப் பொருளே! (தமிழே...) |
|
நடப்பு: |
1. இறை மொழி: |
பரமனின் பனிமொழி தமிழே! - அந்தக் குருபரன் அருளிய உறுமொழி தமிழே! அரனுரைத் திருமொழி தமிழே! - அழகு அறுமுக இளையனின் அருள்மொழி தமிழே! திரிபுரை உரைமொழி தமிழே! - தெய்வக் கரிமுக முதல்வனின் கனியுரை தமிழே! திருமறை உறைமொழி தமிழே! - செல்வத் தரணியின் நிறைமொழி முதன்மொழி தமிழே! (தமிழே...) |
|
2. மறை மொழி: |
அமரனின் திருமுறை தமிழே! - ஆன்ற அறிவுடை முனிகளின் மனமொழி தமிழே! குமரனின் குருமொழி தமிழே! - அவன் குறிப்பிடும் பரம்பொருள் ஓமொலி தமிழே! ’வாசிவாசி’ என்னுவது தமிழே! - சிவ வாக்கிய மறைமொழி உன்னுவது தமிழே! ஆதிசிவம் ஆனபொருள் தமிழே! - கூடி ’அன்பே சிவம்’ ஆகும்பொருள் தமிழே! (தமிழே...) |
|
3. நிறை மொழி: |
அருமறை உரைவதும் தமிழே! - அதில் உறைபெறு திருமுறை வழிமொழி தமிழே! கருவுடைத் திருமொழி தமிழே! - எங்கும் கருத்தொடு உயிரென விரிந்ததும் தமிழே! உருவுடை உணர்வும் தமிழே! - உலகில் உருமாறிப் பலவாகி உதித்ததும் தமிழே! திருவுடைத் திரவியம் தமிழே! - நல் திருவிடக் குலத்துயர் முதலதும் தமிழே! (தமிழே...) |
|
4. நிலை மொழி: |
முச்சங்கம் யாத்ததும் தமிழே! - மூல முதல்வனும் முருகனும் காப்பதும் தமிழே! முச்சுவை வார்த்ததும் தமிழே! - முதல் மூவேந்தர் கூத்தாடிக் காத்ததும் தமிழே! முப்பாலைத் ஆர்த்ததும் தமிழே! - புவி மூத்தகுடி சாற்றிவரும் மூத்தமொழி தமிழே! தப்பாமல் வாழ்வதும் தமிழே! - இந்தத் தரணியில் இளமை எப்போதும் தமிழே! (தமிழே...) |
|
5. மூல மொழி: |
அகத்தியோன் வகுத்தவகை தமிழே! - நல் அகத்தையும் புறத்தையும் தொகுத்ததும் தமிழே! சிலம்புமொழி செப்புவதும் தமிழே! - செங் காப்பியத்துள் தொன்மைதனைச் சாற்றுவதும் தமிழே! மூதுரையுங் கூறுமொழி தமிழே! - திரு மூலனுரை மூவாயிரம் முகிழ்த்ததும் தமிழே! ஞானியரின் போதமொழி தமிழே! - அவர் நாதவொலி வேதமொழி என்பதுவும் தமிழே! (தமிழே...) |
|
6. கலை மொழி |
சித்தர்களின் சிந்தைமொழி தமிழே! - அவர் சிந்தைவழி செய்தபணி செப்புமொழி தமிழே! கவிஞர்களின் சந்தமொழி தமிழே! - அவர் கலைபொழிய நெஞ்சுருகி சிந்துமொழி தமிழே! இசைவேளர் மரபுமொழி தமிழே! - அவர் இசையோடு பண்பாட வந்தமொழி தமிழே! கலைவாணர் பேசுமொழி தமிழே! - அவர் கலையாடிக் கவிபாடிக் கொஞ்சுமொழி தமிழே! (தமிழே...) |
|
7. வண் மொழி |
பழையதும் நிலையதும் தமிழே! - பண்டு வளமையும் எளிமையும் வலிமையும் தமிழே! அழகியல் நளினமும் தமிழே! - என்றும் இளமையில் செழுமையில் விளைவதும் தமிழே! இலக்கியத் தரமெனில் தமிழே! - மொழி இனிமையும் திறமையும் ஆழமும் தமிழே! கலையதன் மேன்மை தமிழே! - நற் கவிப்பொருள் செறிவும் நிறைவும் தமிழே! (தமிழே...) |
|
8. இயல் மொழி: |
இயற்கையின் முதன்மொழி தமிழே! - என்றும் இயலிசை நாடகம் என்பதும் தமிழே! நயத்துரை கனிமொழி தமிழே! - என்றும் நலத்தொடு களிப்பினை நல்குதும் தமிழே! வையத்து எழில்மொழி தமிழே! - என்றும் வனப்பொடு வளத்தினை வழங்குதும் தமிழே! உயர்வொடு திகழ்வதும் தமிழே! - என்றும் உதிரத்தில் உணர்வினில் உய்வதும் தமிழே! (தமிழே...) |
|
9. சுவை மொழி: |
எல்லை இல்லாதது தமிழே! - எங்கும் ஏகியே பரவிடும் இன்பமும் தமிழே! இல்லை என்னாதது தமிழே! - எங்கும் இயங்கிடும் நிலையிலும் ஏற்றமும் தமிழே! சொல்லில் சிறந்தது தமிழே! - எங்கும் சுயத்தொடு நயப்பதும் சுவைப்பதும் தமிழே! வல்லமை நிறைந்தது தமிழே! - சட்ட வரைமுறைத் தெளிவையும் வகுத்திடும் தமிழே! (தமிழே...) |
|
10. தண் மொழி: |
வண்மையும் மென்மையும் தமிழே! - நல் வண்ணமும் பண்ணும் முழக்கிடும் தமிழே! திண்மையும் தெளிவும் தமிழே! - நல் கண்ணியம் புண்ணியம் துலக்கிடும் தமிழே! அண்மையும் தண்மையும் தமிழே! - நல் உண்மையும் அன்பையும் புகல்வதும் தமிழே! பண்பையும் பகிர்வதும் தமிழே! - நல் நுண்கலை நுட்பம் நுவல்வதும் தமிழே! (தமிழே...) |
|
11. பொன் மொழி: |
கடலினை முனைந்ததும் தமிழே! - முதலில் கடலொடு முகிழ்த்ததும் முகிழ்ந்ததும் தமிழே! கடலினைக் கடைந்ததும் தமிழே! - முதலில் கடலினைக் கடந்து களித்ததும் தமிழே! நலத்தினை வளர்த்ததும் தமிழே! - முதலில் நன்னெறி ஒழுக்கம் நவின்றதும் தமிழே! அகத்தினில் செழித்ததும் தமிழே! - முதலில் அறநெறிப் பொதுமறை அளித்ததும் தமிழே! (தமிழே...) |
|
12. நன் மொழி: |
பொறுப்புரை பொழிவதும் தமிழே! - முதல் புரிதலை அறிதலைப் படைத்ததும் தமிழே! நறுக்குரை நயமெனில் தமிழே! - முதல் நல்லவை அல்லவை நயத்ததும் தமிழே! முறுக்குரை மொழிவதும் தமிழே! - முதல் மொழியெனத் தடத்தினைப் பதித்ததும் தமிழே! சிறப்புரை ’முத்தெனில்’ தமிழே! - முதல் சிந்தனைச் சொத்தெனில் சிறப்பதும் தமிழே! (தமிழே...) |
|
முடிப்பு: |
தமிழே! தமிழே! தமிழே! - இந்தத் தரணியின் முதன் மொழி தமிழே! அருளே! தமிழே! அமுதே! - இந்த அவனியின் முதல் நிலை அழகே! தமிழே! தமிழே! தமிழே! - இங்கு உயிரும் மெய்யாய் உறைந்திடும் தாயே! தமிழே! தமிழே! தமிழே! - இங்கு உளத்துள் உணர்வாய் நிறைந்ததும் நீயே! |
|
*** |
Tuesday, October 19, 2010
கைபேசி (பகுதி: 2)
கைபேசி! (பகுதி: 2) | ||||||||||||||||||||
கைபேசிக் கவிதையின் நீட்சியாக, குறள் வகையில் சில கருத்துக்களைச் சொல்ல விளைந்தேன். உண்மையில் முன்னர் எழுதிய குறளைத் திருத்தவே முயன்றேன். அஃது ஒரு அத்தியாயமாகவே நீண்டு விட்டது. கைபேசி நாகரீகத்தை நெறிப்படுத்தக் குறளால்தான் முடியுமோ? நீங்களே சொல்லுங்களேன்.
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
குறள் : | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
விளக்கவுரை: | ||||||||||||||||||||
1: நோக்கக் குழையா நுண்ணலைக் கைப்பேசி கேட்கக் குழையுந் தரும். நோக்கக் குழையா நுண் அலைக் கைப்பேசி கேட்கக் குழையும் தரும். பொருளுரை: நோக்கினாலும் குழைந்து இளகா நுண்ணலைக் கைபேசி, ஒலி கேட்கக் குழைவினைத் தரும். அதாவது நம் மனதை இளகச் செய்யும். மேலும் நாம் ஒலிப்பதைக் கேட்கத் தன் காதினைத் தரும் என்றும் பொருள் படும். (குழை - காது) 2: காணாது மறையும் கைபேசி கண்டாலும் நாணாது நன்றே நகும். காணாது மறையும் கைபேசி; கண்டாலும் நாணாது நன்றே நகும். பொருளுரை: எங்கோ தொலைந்து காணாது போகும் கைபேசி கண்ணுக்கு மீண்டும் கிட்டினாலும் நாணாதே நன்றாகத் தன் இயல்போடு ஒலிக்கும். உம் எனும் உகாரத்தால் கண்டாலும் காணாவிட்டாலும் அதாவது எப்போதுமே நாணாது நன்றாக நகும் என்பதும் பொருளாகும். கண்ணில் காணாது மறைந்து விட்டாலும் அஃது எழுப்பும் ஒலியால் அதன் இருப்பிடத்தைக் காணலாம் என்பது உட்பொருள். 3: இயைந்தே கைபேசி இயம்பினும் நெடண்மை முயங்கிச் சிதைக்கும் செவி. இயைந்தே கைபேசி இயம்பினும், நெடு அண்மை முயங்கிச் சிதைக்கும் செவி. பொருளுரை: எத்தனை தான் ஒப்பும்படியான இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியைக் காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், அஃது முயன்று விரைவில் செவியின் செயல்பாட்டைச் சிதைத்துவிடும். எனவே காது கெட்டுவிடும் ஆதலின் குறைவான பயன் பாட்டிற்கு மட்டும் கைப்பேசியைப் பயன படுத்துதல் நல்லது என்பது பொருள். 4: இம்மியே இயக்கினும் இணைக் கைப்பேசி விம்மியே பயக்குந் துயர். இம்மியே இயக்கினும், இணைக் கைப்பேசி விம்மியே பயக்கும் துயர். பொருளுரை: [வாகனத்தை அல்லது வேறு ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில்] இம்மி அளவு நேரமே எனினும் இணையாக இயக்கும் கைபேசி, [கவனத்தைச் சிதற வைப்பதால் பயன் படுத்துவருக்கு மாத்திரம் அன்றி அஃது அனைவருக்கும் இன்னலை] பெருந் துன்பத்தை நல்கி விடும். ஆதலின் வேறொன்றை இயக்கும் சமயத்தில் கைபேசியையும் கூடவே இணையாகப் பயன் படுத்துதல்; ஏன் முயற்சித்தலே கூடத் தவறு என்பது ஈண்டு பெறத் தக்கது. 5: தெவிட்டு மொலி தெறின் கைப்பேசி செவிட்டு வழிக்கே செயும். தெவிட்டு மொலி தெறின், கைப்பேசி செவிட்டு வழிக்கே செயும். பொருளுரை: துள்ளும் கைபேசி ஒலியை தெவிட்டும் அளவிற்கு அதிகமாகக் கொள்ளுதல் நிச்சயம் செவிட்டுக்கே வழி செய்து உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். ஆதலின் உயரிய ஒலியளவைத் தவிர்த்து மென்மையாகவும் குறைவாகவும் கொள்ளுதல் நலம் என்பதாம். அளவிற்கு மீறிய அமிர்தமும் விடம்தானே? பொருளுரை: சந்தையை, சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியின் கண் கிடைக்கும் வாய்ப்புக்களிலெல்லாம் முன்னோக்கிப் பரப்புதல் பயனர் நிந்தையையே பதிலாக விளைவிக்கும். பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை. | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
*** |
Monday, October 11, 2010
மரண சாசனம்...
மரண சாசனம்... |
கவிதைப் பின்புலம்: |
'இன்பம் 50’ கவிதையில் “இறுதியில் |
*** |
மரணம் என்றெனும் தெரியா நிலையே மனிதரின் நிலையா வாழ்வினை உரைக்கும்; மரணம் என்னும் மாறா இறுதியை மனதொடு உணர்ந்தால் மானுடம் சிறக்கும்; தெரியும் தேடலில் கருணையும் நிறையும்; தெளிந்த உளத்திடை தெய்வமும் உறையும்; புரிதலின் விளைவால் வெறுப்புகள் ஒழியும்; புத்தியில் பேதங்கள் தயக்கங்கள் அழியும்; 1 பற்றுகள் மறையும்; பக்குவம் விளையும்; பதவிச் சுகத்தின் பாசம் அழியும்; சுற்றம் சொந்தம் பந்தம் விலகும்; சோகம் மோகம் யாவும் அகலும்; அற்ற குளத்து ஆம்பலைப் போலும் அன்புடை வாழ்வே நெஞ்சிடை நிலவும்; உற்ற தெய்வத்து உள்ளொளி நாடி உடலும் உளமும் நலத்தொடு உலவும்; 2 பக்தியும் மலரும்; பண்புகள் புலரும்; பருவ நாடக மயக்கம் தெளியும்; சக்தியும் தெரியும்; சகலமும் புரியும்; சாந்த நிலைதனில் சலனமும் விலகும்; அச்சம் மரணம் துச்சம் ஆகும்; அழுகை, துயரம் யாவும் தொலையும்; முக்தி என்னும் முதன்மை இலக்கில் முனையும் வாழ்வில் மேன்மையே நல்கும்; 3 பிறந்ததும் அழுதோம்; பேதை நெஞ்சில்; இறப்போம் என்பதை எண்ணி நினைந்தா? பிறப்பின் நோக்கம் இறப்போ என்று பிள்ளை மனத்தால் அறிந்தா? உணர்ந்தா? பிறப்பின் முடிவே இறப்பே என்றால் பெற்றயிவ் வாழ்வும் எதற்கே என்றா? இறப்பினை நோக்கி வளர்வதா என்றா? இருப்பின் கணங்கள் குறையுதே என்றா? 4 பிறந்ததும் அழுதால் பெற்றவர் இன்பம்; இறந்ததும் அழுதால் இருப்பவர் துன்பம்; பிறந்ததும் அழுதோம்; பசிக்கா? ருசிக்கா? இருந்தும் அழுதோம்; குறையா? பிழையா? இறந்ததும் அழுதோம் இழப்பா? பிழைப்பா? இரக்கம் கருணை எதற்கும் அழுதோம்.; துறந்ததும் அழுதோம்; தொலைந்ததில் அழுதோம்; துரோகம் ரோகம் அனைத்திலும் அழுதோம்; 5 வரவுகள் இழந்து வருந்தும் துயரில் வாழ்வில் நழுவும் வளமையில்; வலியில் உறவுகள் மறைவில் உணர்ச்சிப் பிரிவில் உயர்வில் தாழ்வில் ஊமை நட்பில் குறைகள் அறிந்து குமையும் பொழுதில் குன்றிய பெருமையில்; குறையும் அருமையில் மறைவில் மனதுள் மயங்கியே அழுதோம்; மனித வாழ்வில் வேறென்ன கண்டோம்? 6 கண்டவை எல்லாம் மறையும் இன்பம்; கருத்திடைக் கனன்ற மாயப் பிம்பம்; உண்டவை உடுத்தவை உடலொடு முயன்றவை வென்றவை சென்றவை விரிந்தவை புரிந்தவை மண்டல மண்ணிடை மலர்ந்தவை நிகழ்ந்தவை மானில மேதினில் வளர்த்தவை சிலிர்த்தவை அண்டிக் களித்தவை அனைத்தும் அகத்தே ஐயம் திரிபிலாச் சிற்றின்பச் சருக்கம்! 7 சலனச் சிறையில் சருக்கும் நினைவில் சருகாய் அருகும் அகவை முதிர்வில் நலத்து நலிவில் நடையின் தளர்வில் நல்லவை அல்லவை அறியும் நிலையில் உலகியல் நடப்பினை ஒதுக்கும் பொழுதில் உளத்தே இறப்பை உணரும் நொடியில் மலங்களைத் துறந்து மயங்கும் தருணம் மரணம் வருகையில் வருந்துதல் முறையோ? 8 மறையும் போழ்தும் அழியாத் துடிப்பா? மரணப் பிடியிலும் மறையாப் பிடிப்பா? இறைவன் அழைப்பை மறுக்கும் நடிப்பா? இருப்பைப் பெருக்க மறுகும் படிப்பா? பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும்; பிழையாச் சுழற்சியில் எதுதான் நிலைக்கும்? அறிந்தன அனைத்தும் அழிதலே உண்மை; அழுதால் மட்டும் வாழ்வா பிழைக்கும்? 9 ஆடிய ஆட்டம் போதும் என்றே ஆண்டவன் அழைக்கும் வேளை அன்றோ? தேடலில் உயிரும் தேர்ந்த நிலையில் திரும்பா இறுதிப் பயணம் அன்றோ? படைத்தோன் வகுத்த விதிப்படி முடியும் பயிலா நாடக இறுதித் தருணம்; கடவுளின் மடியில் மீளாத் துயிலாம்; கரும்பாய் இனிக்கும் மரணம் அஃதே; 10 உடலும் உயிரும் உறவறு நேரம் உதறாப் பற்றால் பயன் என்ன? விடுதலை உற்று ஏகும் போதும் வேதனை கொள்வதில் நலம் என்ன? நடப்பவை யாவும் நலமென நினைந்தால் நாளும் மனதிடைச் சுகம் தானே! கடப்பவை எல்லாம் கடமையே என்றால் கருத்திலும் வருத்தம் இலை தானே! 11 உடலை உயிரும் களையும் நொடியில் உணர்வு மறைதல் என்ன நிபந்தனையா? உலகை விட்டுப் பிரிவது என்பது உயிருக்கு வருகிற உயர் தண்டனையா? மறையும் இறுதித் துளியினில் கூட இறையைத் தொழுதால் பலன் தானே; பிறப்பும் இறப்பும் இல்லா முக்தி பெறுவோம் என்றால் சுகம் தானே? 12 ஒருமுறை தானே வருகிற மரணம் உளத்தால் நொந்து மடிவதும் ஏன்? ஒவ்வொரு நாளும் மரண பயத்தால் உள்ளே வருந்தித் துடிப்பதும் ஏன்? இறக்கும் நொடியும் இன்பம் என்றே இருந்து விட்டாலே குறை என்ன? இரணமே இல்லா மரணம் அல்லால் இறுதியில் பேரின்பம் வேறு என்ன? 13 தரணியில் இயற்கை மரணம் என்பது தானாய் வருகிற இறுதி ஒன்றே; தருமம் கருமம் என்பது எல்லாம் தவமாய் வாழ்ந்து முடிந்த பின்னே; மறுமைச் சுழற்சி வெல்லும் முக்தி மண்ணில் முழுதும் வாழ்ந்த பின்னே; மரணம் என்பதும் இன்பம் தானே மனதுள் தெரியும் உறுதி முன்னே!!! 14 கூட்டினைக் குருவி துறந்திடுங் காலை கூறிடும் வாய்பை இழப்ப தினாலே நாட்டிடை கிடந்து நாறா மெய்யை பாடையில் இட்டுப் பயணம் சுமக்கும் கூட்டினும் பெருக்கினும் வருகிற நாலை கூடிக் களித்த கூட்டம் முதலாய் காட்டிடை எரிக்கும் மானுடம் வரைக்கும் கழல்வோம் இன்றே கடைசி நன்றி!!! 15 நன்றி! நன்றி! நன்றி! |
*** |
Monday, October 4, 2010
எதுவும் எதுவுமாகலாம்...
எதுவும் எதுவுமாகலாம்... |
தெய்வங்கள் மனிதராகலாம்: அவதாரங்கள் மனிதரும் தெய்வமாகலாம்: புத்தன் ஏசு காந்தி நடிகனும் தெய்வமாகலாம்: எம்.கே.டி. எம்.ஜி.ஆர் என்.டி.ஆர். என்ன செய்வது சில நேரங்களில் சில அவதாரங்கள்... நடிகரும் ஆகலாம்: டி.ஆர். சாம் ஆண்டர்சன். :) |
*** |
Friday, October 1, 2010
அண்ணல் மகாத்மா நினைவஞ்சலி...
குறிப்பு: மகாத்மாவின் சீடர்கள் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும், கர்ம வீரர் காமாராஜ் அவர்களுக்கும் கூட இன்று நினைவு நாள். லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த நாள். தமிழகம் கண்ட கர்ம வீரர் காமராஜருக்கு மறைந்த நாள். மகாத்மாவுடன் இரண்டறக் கலந்த இந்த நல்ல ஆத்மாக்களையும் இன்றைய நன்னாளில் நினைவு கூறுவதுடன் வாழ்த்துவோம். நன்றி.
|
அண்ணல் மகாத்மா நினைவஞ்சலி... |
தந்தையா, தாத்தாவா, அண்ணலா, ஆத்மாவா? தனிமனிதச் சுதந்திரத்தின் மனமெனும் அங்கமா? அத்தனையும் ஒன்றான அற்புத மானுடம் அகிம்சையே காட்டிய ஆற்றலின் மகிமை மொத்த அகிலத்தின் முதன்மேன்மைச் சிந்தனை முயற்சிக்கே பரிணமித்த முழுமையின் எளிமை இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா! சத்தியமே சோதித்த சோதனைச் சத்தியம் சமத்துவம் நடாத்திய சமதரும உத்தமம் கத்தியும் ரத்தமும் காணாத போர்க்களம் கருணையும் உரிமையும் வற்றாத நிலைக்களம் பித்தமும் போக்கிடும் அறிவில் நிறைகுடம் பெண்மையைப் போற்றிடும் அன்பின் உறைவிடம் இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா! சுத்தமும் சுகமும் அகமும் புறமுமாம் சுதந்திரம் என்பதே பிறரையே மதிப்பதாம் எத்தனை புகழிலும் வழுவாத ஒழுக்கமாம் எண்ணம் யாவிலும் நேர்வழி யோகமாம் புத்தனைப் போலவே வாழ்ந்ததும் உதாரணம் புரிந்துகொள்ள ஏதுவாய்ப் புனிதமான மானுடம் இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா! சித்தராய் வாழ்விலே இயற்கையின் வைத்தியம் சிந்தனை செயலிலே நேர்மையில் பைத்தியம் உத்தமராய் உண்ணலில்; ஊட்டலில் அகிம்சையாம் உலகமதம் யாவையும் ஒன்றுகண்ட ஞானியாம் சத்தியமாய்ச் சுயநலத்தைக் காணாநல் யோகியாம் சக்தியொடு நல்லறத்தைக் காத்தமா மானுடம் இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா! அகிலத்திற்கே அருமைப் புதல்வனை; அண்ணல்காந்தியை; அன்னைபாரதம் அளித்தபெரும் பொன்நாள்; இன்னாள்; சகிப்பையும் அன்பையும் சமதருமச் சிந்தனையும் சமுதாயம் நினைவுகொள்ளும் சத்தியத் திருநாள் அண்ணல்தம் பிறந்தநாள் ஆனந்த நினைவுநாள் ஆன்மச் சோதனைக்கு ஆண்டில்வரும் நன்நாள் அன்புடையோர் மேன்மைக்கு அடிவைக்கும் பெருநாள் அறம்போற்றும் அறிவுடையோர் கொண்டாடும் திருநாள்! அண்ணலே வாழி!!! எமது அன்பு நெஞ்சமே வாழி!!! |
*** |
கைபேசி! (பகுதி: 1)
கைபேசி! (பகுதி: 1) |
புதுக்கவிதை: |
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அவள் அப்பனும் நோக்கினான் அட அனைவருந்தான் நோக்கினர் ”பெரிதாய்” ஒன்றுமில்லை... நோக்கியாக் கடை ஷோக்கேசில் புத்தம் புதுவரவு புதியவகைப் புதுவடிவு கையடக்கக் கவர்ச்சி நோக்கியாக் கைபேசி!!!
|
|
எண் சீர் விருத்தம்: |
நோக்கரிய நோக்காய் நுணுக்கரிய நுண்ணுர்வாய் நோக்கியரே நோக்கினரே நோக்கா நோக்கியாம் நோக்கியா அங்காடிக் நோக்கப் பேழையிலே நோக்கக் கவர்ச்சியாம் நோகாத வளர்ச்சியாம் போக்கும் வரவும் போற்றிடுந் தெளிவாம் நேர்த்தியாம் தோற்றமாம் நெடுங்காலத் தேற்றமாம் நோக்கும் வாக்கும் நுவலும்புலச் சித்திரமாம் நோக்கியாப் புதுவரவாம்; நுண்பதுமைக் கைப்பேசி!!!
|
|
இன்னிசை வெண்பா: |
நோக்கியாப் புதுவரத் துக்கருவி நோக்கின் வாக்கில் வல்லொலி திரையில் தெள்ளொளி தாக்கும் மென்கிருமிக் காப்பு; தகதகத்து நோக்கக் கவர்ச்சிக் கைப்பேசி யுமஃதே!
|
|
அகவல்: |
கையகப் படுத்திய வையகச் சுருக்கம்; காதினுள் அடங்கும் காதலின் நெருக்கம்; வானொலி பொழியும் தேனொலி இன்பம்; வண்ணொளி மொழியும் கண்ணொளி பிம்பம்; வரம்புகள் இல்லா வானலைப் பிணையம்; நரம்புகள் இல்லா நனவலை இணையம்; தகுதியைக் கூட்டும் கௌரவத் துண்டு; தரத்தினைக் காட்டும் யௌவனப் பெண்டு; பணியோ இலையோ பதவிசுப் பேழை; பணிவோ நிலையோ உணரா ஏழை; பொய்யோ மெய்யோ புலம்பிடும் கருவி; புரிந்தால் இசையாய் உருகிடும் அருவி; அவசர கால அடிப்படை மருந்து; அடிக்கடி படைக்கும் அழையா விருந்து; உறவுகள் பெருக்கும் உணர்விலாச் செல்லம்; உயிரினைச் சொடுக்கும் உரைதனில் வெல்லம்; அரற்றும் மொழிக்கே கட்டண எச்சம்; அனைத்து வரத்தும் இலவச மிச்சம்; அறிந்தவர் தெரிந்தவர் கூப்பிடு தூரம்; அழைப்பும் மறுப்பும் கூடுதல் பேரம்; தொலைவைச் சுருக்கிய ஓயாத் தொல்லை; செலவைப் பெருக்கிடும் மாளாக் கிள்ளை; தனிமை கெடுக்கும் தடங்கல் வில்லை; தவறியும் பிழைக்கும் வளர்ப்புப் பிள்ளை; உரையினைப் பரிமாறும் இடைமுகத் தகடு; உளங்களை இடம்மாற்றும் மறைமுகச் சுவடு; தடைகளைத் தாண்டிடும் படையெறி அம்பு; கடமைகள் வேண்டிடும் கைப்பொறி வம்பு; இருப்பினை இழக்கா இயந்திர உலவி; இரக்கைகள் இல்லா இராட்சதக் குருவி; கணத்திடை கடத்தும் காற்றலைப் பூவை; கடமையைத் துலக்கும் எந்திரப் பாவை; குறுகியத் தகவலின் விரைவியத் தூது; கொஞ்சிடும் சேவையில் விஞ்சுவது யாது? நன்மைகள் சேர்க்கும் நாவலந் தீவு; நம்பிக்கை காக்கும் நயம்படு மாது; தரவினைப் பேணும் குறுந்திரள் உருட்டி; வர-வினை செல-வினை வைகுந் திரட்டி; நினைவினைத் தூண்டும் குறிப்புரை ஊட்டி; நனவினைப் பகரும் ஆண்டுநாட் காட்டி; சலிப்பினைத் தெரியாச் சமர்த்துக் குட்டி; சஞ்சலம் அறியாச் சந்தனக் கட்டி; தற்புகழ் தேடா ஊழியப் பிறவி; தன்லயந் தவறா தனிபெருந் துறவி;; நினைவகச் சுமையைக் குறைக்கும் நட்பு; நெருங்கிய அண்மையில் துடிக்கும் உயிர்ப்பு; வையகம் இங்கே வாழ்கிற வரைக்கும் மெய்யுறை அங்கமே இக்கை யலைபேசி! இதயத்து நெருக்கம் மார்பக வலியாம்; காதொடு பெருக்கம்; கபாலப் புற்றாம்; காந்தக் களத்திடைக் கனன்றிடும் வாழ்வே; கவனம் வைத்திடில் வருமோ தாழ்வே? அறிவொடு நுகர்வின் அனைத்தும் நலமே; அளவினை மிஞ்சின் அமிர்தமும் விடமே!!!
|
|
*** |