கண்மணி அன்போடு... |
என் சிந்தனைக்குள் நீயும் இருப்பாய் நம்பிக்கையோடு! என் சிந்தனை முழுவதும் இருக்க வேண்டுமென எண்ணாதே.... அன்பே உலகில் உன்னைத்தவிர என்னையும் உன்னைப் போலவே பலர் நேசிக்கவும் நேசிக்கப் படவும் விரும்புகிறார்கள் பல மனிதர்களின் புரிதலுக்கு நான் வேண்டுமாம் சாதனைகள் செய்ய மனம் தேவை பயணம் செய்ய கவனம் தேவை கோளத்தின் அட்சய தீர்க்க ரேகைகளின் இடைவிட்ட சந்திப்புக் கணங்களில் மாத்திரம் நீயும் நானும் ஊடாடலாம்... நீ நீயாகவும் நான் நானாகவும் நாம் நாமாகவும் இவ் உலகில் பல சமயங்களில் செயல்பட ஏன் வாழவும் வேண்டியவர்கள் எப்போதும் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டும் ஆற்றும் பணியைப் பார்த்துப் பார்த்து பங்கெடுக்க அடம்பிடித்து அடிப்படை தெரியாமல் பலமுறை விழிப்பாய் ஏன் சொல்லிக் கொடுக்க மாட்டீர் என்று வம்பிழுத்து நான் கற்றுக் கொண்டால் வெற்றி பெற்றுவிடுவேன் என்றுதான் சொல்லித்தர மாட்டீர்கள் என்று கோபப்பட்டு... அழுது... சே சே... சரியான இம்சை நீ! என் சிந்தனையைச் சிதற வைத்து என்ன சுகம் காணுகின்றாய் என் இனியவளே? வளர்ந்தாலும் நீ இன்னும் சிறுபிள்ளை தான்... என்றால் நீங்களும் தான் என்பாய்!!! ஐயோ நான் என்ன செய்ய? |
|
*** |
Wednesday, October 27, 2010
கண்மணி அன்போடு...
Subscribe to:
Post Comments (Atom)
கண்மணி என்னொட”காதலி”ல் நான் பாடும் கவிதையே!
ReplyDeleteவரிக்கு வரி காதல் நினைவுகள்[நிந்தனையுடன்]
வார்த்தைக்கு வார்த்தை கட்டளைகள்[ஆதரவுடன்]
அடிப்படை தெரியதா இம்சை நீ! இப்படி எழுதினால்?
இன்னும் நன்றாக பொருந்தி இருக்கும்.. மிக மிக அருமையான அழகான நினைவுக்கவிதை....
படித்து,புரிந்து,பிடித்த கவிதை!
சாதனைக்கு வாழ்த்துக்கள்!
@V. Rajalakshmi
ReplyDeleteகருத்துக்களுக்கு நன்றி. அடிப்படை தெரியாத இம்சை நீ என்பதன் கூடவே அப்படிச் சொல்ல என்ன காரணம் என்பதையும் விளக்கி உள்ளேன். அவ்வளவே. சும்மாவெல்லாம் திட்டக் கூடாது அல்லவா?
உங்களுக்குப் பிடித்திருப்பதற்கு அதிலுள்ள அங்கதமும் மெலிதான காதலும் காரணாமாக இருக்குமோ? இல்லை நான் அவத்தைப் படுவதைக் காணவா? (சும்மா விளையாட்டிற்கு :)). என்னமோ போங்கள், புடிச்சிருந்தாச் சரி!!!
சுமந்து கொண்டு நிந்திப்பது போலதான் இருக்கு,
ReplyDeleteஎதிலும் விளக்கம் அவசியம்,[செவிகொடுத்து கேட்கணும்,வாய்திறந்து விளக்கணும்]
பதில் சொல்லவில்லை என்றால் மௌனம் சம்மதம் என ஆகும், விளக்கம் கேட்டால் பதிலுக்கு பதில் பேசுவதா?
கடவுளே! காப்பாற்று,
நான் மாற,
வேண்டும் தோள் கொடுக்கும் தோழியாய்!
வேண்டாம் தோல்வி தரும் காதலியாய்!
நான் மாற,
வேண்டும் வியப்படையும் இன்னிசையாய்!
வேண்டாம் அடிப்படை தெரியா இம்சையாய்!
"
@Anonymous
ReplyDeleteஅருமையான சந்தேகம். பதிவிற்குப் பாராட்டுக்கள். இதோ இன்னொன்று:
அன்பே உனது
அபத்தக் கேள்விகளின்
எனது
ஆச்சரிய மௌனத்திற்கும்
பதிலுக்குப் பதில்
பேசித்தான் பாரேன்....
முகத்தைத் தூக்கி
வைத்துக் கொள்ளாத
வரையிலும் உனது
மவுனமும்
ஏதோ
அர்த்தமுள்ளதாக
இருந்திவிட்டுப் போகட்டுமே!
:)
”ம்ஹூக்கும் ஆசை”
என்பாய் அதற்கும்!!!!
அபத்த கேள்விகள்,ஆபத்தாவதில்லை!
ReplyDeleteஆச்சரிய மௌனம் உச்சரிப்பை தொலைக்கும்!
அர்த்தமில்லாத மௌனம் ஊமை எனப்படும்!
விவாதமில்லா வாழ்க்கை விட்டேத்தியாகும்!
ஊமையிடம் என் முக தூக்கல்!
வெற்றி இல்லாத போர் போலாகும்!
"பதிலுக்கு பதில் பேசத்தான் போறேன்"
"விழிக்கும் முழிகளை பார்க்கத்தான் வழி இல்லை"
"ஹூஹூம்" என்பேன் காரணம் இது பனிப்போர்!
ReplyDeleteநான் மவுனி;
ReplyDeleteநீயுமா?
மிக நல்லது!
நிசப்த நிமிடத்தில்
வைராக்கிய
வைரங்களாகி
ஆழ்கடல் முத்தாக
மாற முயலுவேன்...
சமுத்திரத்தின்
மவுனத்திற்கு
அர்த்தங்கள்
எண்ண முடியுமா?
நன்றி.
Khamoshi Hi Sahi!
ReplyDeleteKahein Hulchal Na,
Banjayen! Tsunami!
எம்மௌனம் என் மௌனம்?
ReplyDeleteஆச்சர்யத்தில் மௌனம்,
ஆணவத்தில் மௌனம்,
ஆத்திரத்தில் மௌனம்,
அழுகையின் முடிவில் மௌனம்,
ஊடல்,கோபம்,வேதனை,
வெறுப்பு,விரக்தி,வெறுமை,
முடிவில் ஏகாந்த மௌனம்!
ஆமோதிப்பதும் மௌனமே!
ReplyDeleteஅவமதிப்பதும் மௌனமே!
அதே! நிசப்த நொடிகளில்,
வைரங்களை வளையலாக்கி,
முத்துக்களை மாலையாக்கி,
முன் வந்து நான் நிற்பேன்!
வைராக்கியம் வாழ்க்கை இல்லை!
அறிவாக்கமும் என்னிடம் இல்லை!
ஆழ்கடல் அமைதியின்,
அர்த்தங்களை யார் அறிவார்?
தாங்கள் அறியாததா?
ரத்தினத்தில் அங்கு ஒன்று
சின்னமான அமைதி முத்து!
மிக அழகான கவிதை தோழரே!
ReplyDeleteபல அன்பர்களின் மனதை வார்த்தையில் வெளிப்படுத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்..
ஒரு சிறு சந்தேகம்..
அது "அட்ச" ரேகை அல்லவா??
அட்சய ரேகை என்று பதித்திருக்கிறீர்கள்!
@Kayalvizhi
ReplyDelete///அது "அட்ச" ரேகை அல்லவா??
அட்சய ரேகை என்று பதித்திருக்கிறீர்கள்!///
உண்மை; நீங்கள் சொல்லுவதே சரி. பிழைக்கு வருந்துகிறேன். திருத்திவிடுகிறேன் தோழி. மிக்க நன்றி.