சுழற்சி |
|
தன்னை விடச் சிறிய மீனை விழுங்கிக் கொண்டிருக்கும் மீன் இன்னும் உணரவே இல்லை தான் நீந்திக் கொண்டிருப்பது இன்னொரு மீனின் வாயில் என்பதை... என் கண்ணின் மணியில் நீ உன் கண்ணின் மணியில் நான் மீண்டும் உள்ளே உள்ளே மீண்டும் ... புகைப்படக் கருவியை வைத்துக் கொண்டு ரகசியமாய் நான் அவனைப் படம் பிடிக்க எனக்குப் பின்னால் இன்னொருவன் என்னை அவனுக்குப் பின்னால் இன்னொருவன் அவனை... அட நான் படம் பிடிப்பவனும் யாரையோ படம்பிடிக்க.. அடச்சே கடைசியில்தான் தெரிந்தது அந்த அவன் தான் அவன்... யாரையோ, எதையோ தேடி ஓடுகையில் ஒருவன் அல்லது எதுவோ துரத்துவதும் இது தானோ... பூமி சூரியனைச் சுற்றி சுழன்று கொண்டே இருக்கிறது தன் நீள் வட்டப் பாதையில் சந்திரன் பூமியை... எதைத் தேடி? |
|
*** |
Wednesday, June 24, 2009
சுழற்சி
Subscribe to:
Post Comments (Atom)
நம்முடைய அஞஞானமே நம்மை தவிக்க வைக்கிறது.
ReplyDeleteவரவிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் கேசவன்.
ReplyDeleteஅஞ்ஞானம் ஞானத்தையும், ஞானம் அஞ்ஞானத்தையும் தேடிச் சுழல்வது...
இரவைப் பகலும், பகலை இரவும்...
சுழல்வது ...
இயற்கைச் சுழற்சி புரிந்தும் புரியாமலும்
உலகம் சுழல்கிறது... சரித்திரம் நிகழ்கிறது?